பிரான்சில் நடைபெற்ற மாவீரர் ஞாபகார்த்த சதுரங்கம்,கரம்போட்டிகளில் வல்வை புளுஸ் வீரர்கள் சிறப்பான வெற்றிகள்.
பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறை வருடாந்தம் நாடத்தும் மாவீரர் ஞாபகார்த்த விளையாட்டுக்கள் நந்தியார் பகுதியில் 29-01-2012 அன்று ஆரம்பமாகியுள்ளன.முதலில் சதுரங்கம்,கரம் போட்டிகள் நடைபெற்றன.இவ்விளையாட்டுக்களில் பல விளையட்டுகழக வீரர்கள் பங்கு பற்றினார்கள் இதில் சதுரங்கம் போட்டியில் பதினாறு வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் சிறப்பாக விளையாடி மேலும் இறுதிப்போட்டியில் 93 அணியினை எதிர்த்து வல்வை புளுஸ் அணியின் வீராங்கனை மணிவண்ணன் டிலுக்சி முதலாவது இடத்தினை பெற்றுக்கொண்டதுடன்,பதினெட்டு வயதிற்கு மேல்பிரிவில் மணிவண்ணன் பிரசாந்த் மூன்றாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.தொடர்ந்து பல விளையாட்டு நிகழ்வுகள் வரும் மாதங்களில் இடம்பெறவுள்ளன.
பிரான்சில் நடைபெற்ற மாவீரர் ஞாபகார்த்த சதுரங்கம்,கரம்போட்டிகளில் வல்வை புளுஸ் வீரர்கள் சிறப்பான வெற்றிகள். added by admin on View all posts by admin →