இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள வெல்லாவெல ஏ பிரிவு அலுபொல தோட்ட இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. ஹப்புகஸ்தென்ன பிளான்டேசனுக்குச் சொந்தமான இத்தோட்டத்திற்கு இன்று (17) அதிகாலை 2 மணியளவில் புகுந்த சிங்கள குண்டர்கள் இந்த தாக்குதலை நடாத்தியதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். தாக்குதலில் இரு தமிழர்கள் படுகாயமடைந்து பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சில வீடுகளுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வெவல்வத்தை பகுதியில் உள்ள இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் சிங்களவர்களால் தாக்கப்படுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன் 40 பேர் கொண்ட சிங்கள குண்டர்கள் இந்த பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்குள் புகுந்து நடாத்திய தாக்குதலில் ஆலய அறங்காவலர் காயமடைந்தார்.
இம்முறையும் ஆலய அறங்காவலரை சிங்கள குண்டர்கள் தேடியுள்ளனர். அவர் இல்லாததால் அவரது சகோதரரை தாக்கி சிங்கள குண்டர்கள் காயப்படுத்தியுள்ளனர்.