மீண்டும் போராடும் துவங்கும் கூடங்குளம் !

கூடங்குள அணுமின் நிலையத்தை திறக்க காங்கிரசு அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கையே கடைப்பிட்த்து வருகிறது.இந்நிலையில் மீண்டும் கூடங்குள அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் ஆரம்பாகவுள்ளது.இப்போராட்டம் பிப்ரவரி-2 ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “மத்தியக் குழுவைச் சந்தித்து நாளை ஒரு மனுவை அளிக்க முடிவு செய்துள்ளோம். 

அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 2 முதல் புதிய போராட்டங்கள் மேற்கொள்ளப்படும். பிப்ரவரி 2 முதல் 8 வரை ராமநாதபுரத்தில் அணு உலை எதிர்ப்பு இயக்கம் படகு பேரணி மேற்கொள்ளும்.
பின்னர், கூட்டப்புள்ளி விலக்கு தொடங்கி விசுவநாதபுரம் வரை கறுப்புக் கொடி பேரணி நடத்தப்படும்.

மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மற்றும் நெல்லையில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்படும்.

மார்ச் 19-ம் தேதி தொடங்கி, கன்னியா குமரி முதல் ராமேஸ்வரம் வரை நடைபயணம் மேற்கொள்ளப்படும்,” என்றார் கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்.

முன்னதாக, இடிந்தகரையில் நூறு நாட்களுக்கும் மேலாக உள்ளூர் மக்களால் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.