சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர்களின் மாபெரும் ஒன்றுகூடல்
உலகெங்கும் பரந்து வாழும் வல்வை மக்கள் ஒன்று திரண்டு வல்வை முத்துமாரி அம்மனை தரிசிக்க இங்கு வருகை தந்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் தாங்கள் கல்வி கற்ற சிதம்பராக்கல்லூரியை பார்வையிட பழைய மாணவர் தாய் சங்கம் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. வட மாகாணத்தில் முதல் தரமாக அமைந்துள்ள விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பௌதீக வளங்கள் கணணி வலையமைப்பு இணையதளம் மின்பிறப்பாக்கி அவற்றின் பயன்பாடு ஆகியவற்றை நேரடியாக பார்வையிடலாம்.
ஓர் உதாரண பாடசாலையாக பரிணாமம் பெற்று வரும் சிதம்பராக்கல்லூரியில் உங்களுடன் கல்விபயின்ற சக நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அத்துடன் இந்த அபிவிருத்தி பணிகளில் தங்களை இணைத்துகொள்ளும் அரிய சந்தர்ப்பத்தை வழங்கி உங்களின் அறிவுபூர்வமான சிந்தனைகளையும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள எதிர்பார்கின்றோம்.
இடம் : சிதம்பராக்கல்லூரி
காலம் : 22 – 04 – 2013 திங்கட்கிழமை மாலை 3:30
தொடர்புகளுக்கு:
ஜெயவீரசிகாமணி – 0779789579
ஜெயலிங்கம் – 0779367501
ரஞ்சித் – 0777768960