Search

கனடா வாழ் வல்வை மக்களின் கண்ணீர் அஞ்சலி-அமரர் செல்லையா காஞ்சிமாவடிவேல் ( காஞ்சியப்பா )

கனடா வாழ் வல்வை மக்களின் கண்ணீர் அஞ்சலி
அமரர் செல்லையா காஞ்சிமாவடிவேல் ( காஞ்சியப்பா )
——————–
வல்வையின் நெடிய வரலாற்றை அன்று முதல் இன்றுவரை
தொடுத்து நிற்கும் காலநதி காஞ்சியப்பா இழப்பு பேரிழப்பு..
வல்வையை அன்னிய பகைவர் தாக்க வந்தால் போருக்கு
வீரமாக முன் நிற்கும் காஞ்சிமாவடிவேலுக்கு வீர மரியாதைகள்!
வல்வையை அறிந்தவர் இன்று உலகில் ஆயிரம் ஆயிரம் ஆயினும்
வல்வையால் அறியப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு அஞ்சலிகள்..
காஞ்சித்தலைவன் என்று புகழ்வது போல வல்வை மண்ணில்
காஞ்சியப்பா என்ற புகழுடன் பூத்த பெருமை வாடியதே..
மெல்ல மெல்ல மறையும் வல்வையின் பெரு நதிகளில் மிக
மூத்த நதியொன்று தனது ஓட்டத்தை நிறுத்தியது இழப்பு..
அந்நாளில் வல்வையின் வீரமாய் நடந்த காஞ்சியப்பா
எழுச்சி நடையை இட்டு நிரப்ப இனி யார் வருவார்..?
எதை செய்தாலும் அதை ஓர்மத்துடன் செய்து முடிப்பவரே
உமது காலம் இனி கதைகளாக வாழும் எமது அஞ்சலிகள்..
செல்வத்திலே சிறப்பு கண்டு சீரோடும் பேரோடும் வாழ்ந்தீர்
இன்று வல்வைக்கு விடை சொல்லி வரலாறானீரே..!
காஞ்சியப்பா இல்லாத வல்வைக்கு அழகொன்று குறைந்ததே
இறந்தாலும் நம்மூர் உங்கள் பெயர் சொல்லி போற்றும்..!
ஆத்ம சாந்திக்கு ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்..
வல்வை மக்கள் கனடா



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *