தமிழீழம்
வடக்கு, கிழக்கு மற்றும் உலகம் பூராகவும் பரந்து
வாழும் தமிழர்களின் உயிர் மூச்சான பூமி தமிழீழம் !
தமிழர்களின் தலைமகனானாலும் எந்தவித ஆசாபாசங்கள்
இல்லாது போராடிய பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின்
தியாகத்தில் கட்டி வளர்ந்த அழகிய பூங்கா தமிழீழம் !
இந்தப் பூங்காவில் விலை மதிக்க முடியாத பல தியாகங்களை
புரிந்த புனிதர்கள் உறங்குகின்ற புண்ணிய பூமி தமிழீழம் !
மூன்று தசாப்த காலமா பல தியாகங்கள் புரிந்து
கட்டியெழுப்பப்பட்ட புண்ணிய தேசம் தமிழீழ தேசம் !
அந்தக் காலத்திலிருந்தே ஈழத்தின் வடக்கு, கிழக்கு பகுதிகளில்
தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதுவும் உண்மை !
இன்று இலங்கை என்று அழைக்கடும் தேசத்தின்
அன்றைய பெயர் ஈழம் என்பது ஆகும் !
இக் காலப்பகுதியில் வன்னி இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம் என
இரு பிரிவுகளாக இரண்டு மன்னர்கள் எவருக்கும்
அஞ்சாத துணிவோடு ஆட்சி புரிந்த வரலாறுகள்
இன்றை வரைக்கும் ஆதாரங்களுடன் உண்டு!
அன்றைய காலத்து சிங்களத்து மன்னர்கள் தமிழ் மன்னர்களுக்கு
வரி செலுத்தி தமது ஆட்சியை தக்கவைத்தனர் என்பதும்
தமிழ் மன்னர்களின் வீரதீரங்கள் ஐரோப்பியர்களுக்கு எதிராக
முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்கள் போன்றவையும்