கணணி முன்பாக அமரும் முறைகள்.- முக்கியமானது

கணணி முன்பாக அமரும் முறைகள்.- முக்கியமானது
ம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டு உலகையே வாங்கலாம். ஆனால் நீங்கள் உட்கார்ந்திருக்கும் முறை சரியில்லை என்றால் கூடவே இலவச இணைப்பாக சில உபாதைகளையும் வாங்கலாம். கம்ப்யூட்டர் முன் ஏனோ தானோவென்று உட்கார்ந்துகொண்டு தொடர்ந்து பல மணிநேரம் பணிபுரிவதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். கம்ப்யூட்டர் முன்பு நாம் அமரும் முறை சரியாக இருந்தால், கண் வலி, முதுகு வலி போன்ற பிரச்னைகளை நிச்சயமாகத் தவிர்க்க முடியும்.
கம்ப்யூட்டர் முன் அமரும் முறை பற்றி ஸ்போர்ட்ஸ் மெடிசின் டாக்டர்   கூறும் அறிவுரைகள்:right sitting position
  • இருக்கையின் நுனிப் பகுதியில் அமர்வது தவறு. இதனால் தொடைப் பகுதியில் ரத்த ஓட்டம் தடைப்படும். தொடைப் பகுதியில் உள்ள தசைநார்கள் இறுகி இடுப்பு வலியும் உருவாகும். தொடந்து தசை நார்கள் இறுகிய நிலையில் இருந்தால், ஆக்ஸிஜன் கிடைப்பது தடைப்பட்டு தசை நார்கள் சுருங்கிய நிலையை அடைந்துவிடும்
  • பாதம் முழுவதும் தரையில் அழுந்துமாறு உட்கார வேண்டும். கால் விரல்களின் நுனிப்பகுதி மட்டும் தரையைத் தொடும்படி அமர்வது தவறு. இதனால் காலின் பின் பக்கத்தசை இறுகி ரத்த ஓட்டம் தடைப்படும். இது கால் வலியை உண்டாக்கும். குதிகால் மட்டும் தரையில் படும்படி அமர்வதால் கால் கட்டை விரலிலும் கணுக்காலிலும் வலி ஏற்படும்.
  • பெரும்பாலும் இருக்கையில் அமரும்போது, முதுகுத்தண்டை வளைத்த நிலையிலேயே பலர் அமர்கின்றனர். அதனால், கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி மற்றும் முதுகுதண்டுவடப்பாதிப்புகள் ஏற்ப்படும்.
  • கம்ப்யூட்டரின் திரையும் கண்களும் சமமான உயரத்தில் wrong sitting இல்லை என்றால் கண்கள் சிரமத்திற்கு உள்ளாகும்.
மடிக்கணினி உபயோகிக்கும்போது
  • மடிக்கணினி என்றால் அதனை மடியில் வைத்தபடி வேலை செய்யவேண்டும் என்பது இல்லை. மடியில் வைத்து வேலை செய்யும் போது குனிந்து பார்த்து வேலை செய்ய வேண்டிவரும். இப்படி வேலை செய்வது தலைவலி, கண் வலி, கழுத்து வலி போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே மடிக்கணினியையும் அதற்குரிய மேஜையின் மீது வைத்து இயக்குவது சிறந்தது.
  • முதுகுத்தண்டு எலும்பு முன்னோக்கி வளையாமலும், பக்கவாட்டில் வளையாமலும் அமர வேண்டும்.
  • கைப்பகுதியும் மணிக்கட்டும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். மணிக்கட்டும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
  • தாடையானது மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ இல்லாமல் நேராக இருக்க வேண்டும்.தாடையானது மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ இல்லாமல் நேராக இருக்க வேண்டும்.
  • கால் மூட்டுகளை அதிகப்படியாக மடக்கியோ நீட்டியோ இருக்காமல், தலைகீழ் ‘L”வடிவத்தில் இருக்க வேண்டும். மூட்டுகளை அதிகப்படியாக மடக்கியோ நீட்டியோ இருக்காமல், தலைகீழ் ‘L”வடிவத்தில் இருக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் முன் குழந்தைகள்
  • கம்ப்யூட்டர் வைக்கப்பட்டு இருக்கும் மேஜையின் உயரம், குழந்தைகள் நெஞ்சுக்கு நேராக இருப்பது தவறு. இதனால் கண் மற்றும் கை வலி உண்டாகும். அதனால், கம்ப்யூட்டர் இருக்கும் மேஜையின் உயரம் குழந்தையின் வயிற்று பகுதிக்கு நேராக இருக்க வேண்டும். அப்போதுதான் கண்களால் சீரான நேர்கோட்டில் கம்ப்யூட்டரைப் பார்க்க முடியும். கைகளை வலியின்றி இயக்க முடியும்.
  • குழந்தையின் கால் நீளம் குறைவாக இருந்தால், குழந்தை அமர்ந்து இருக்கும் நாற்காலியில் இருந்து கால் தொங்கிய நிலையில் இருக்கும். இதனால் கால் வலி ஏற்ப்படும். கால் தொங்கிய நிலையில் இருப்பதை தவிர்க்க காலுக்கு கீழ் சற்று உயரமான பலகை அல்லது பெட்டி போன்ற ஒன்றை முட்டு கொடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.