வரலாறு எனது வழிகாட்டி என்ற தேசியதலைவரின் மேற்கோளுக்கு இணங்க தமிழீழவிடுதலைப்போராட்ட
த்தின் பதிவுகளை மீளவும் எடுத்து vvtuk.com இணையம் வழங்குகின்றது.
இன்று தமிழீழவிடுதலைப்போராட்டமானது ஆயுதரீதியாக தற்காலிகமாக மௌனமாகிவிட்டாலும் தமிழீழம் என்ற அரசியல்இலட்சியம் தமிழீழத்திலும் அதன் எல்லைகடந்து தமிழ்மக்களிடமும் ஒரு பெரும் இலட்சியவீச்சாக எழுந்துநிற்கின்றது.
இந்த மாற்றம் ஒருஇரவில் திடீரென நிகழ்ந்தது அல்ல.எண்ணற்ற மாவீரர்களின் உன்னதமான தியாகத்தாலும் தேசியதலைவரின் உறுதியான வழிகாட்டலாலுமே 30வருடஆயுத போராட்டத்தால் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதற்காக நிகழ்த்தப்பட்ட வீரவரலாறுகள்,மானிடவரலாறு காணாத அர்ப்பணங்கள் என்றுமே வீணாக போய்விடாது.
அதில் ஒன்றுதான் வீரவேங்கை ஜெயத்தின் வரலாறு.
1985ம்ஆண்டு மே 9ம்திகதி அதிகாலையின் அமைதியில் வல்வெட்டித்துறைபகுதியை சுற்றிவளைத்த சிங்களவெறியனான மேஜர் மெண்டிஸ் தலைமையிலான சிங்களதேசப்படைகள் உடுப்பிட்டிப்பகுதியின்
முக்கியநிலைகளில் நிலையெடுத்து படுத்துஇருந்தபோது தனிஒருவனாக அவர்களின் தலைமைதளபதியான மேஜர் மெண்டிசையும் மேலும் 5சிங்களபடைகளையும் கொன்றுவிட்டு வீரச்சாவடைந்த வரலாறு ஜெயத்தினுடையது.
வல்வெட்டித்துறைக்கு அருகே உள்ள இலந்தைக்காடு கிராமத்தைசோந்த இந்த மாவீரனின் நினைவாக 1986ல் வெளியிடப்பட்ட ஆவணம் இது.!