நீதிக்கான நடைப்பயணம் ஆரம்பம்
இன்று 05.20.2012 மதியம் 1.30 மணியளவில் பெல்ஜியம் ப்ருசெல்ஸ் (Belgium, Brussels) ஐரோப்பிய பாரளமன்றத்திக்கு முன் அகவணக்கத்துடன் “நீதிக்கான நடைப்பயணம்” (Walk for Justice) ஆரம்பமானது.
இவ் நடைப்பயணத்தை ஆரம்பித்த வேலுப்ப்பிள்ளை மகேந்திரராஜா (Velupillai Mahendrarajah), லோகநாதன் மருதையா (Loganathan Maruthaiah) , மற்றும் ஜக்கமுத்து க்ராசியன் (Jacomuthu Gracian) ஆகிய மூவரும் எப்படியான காலநிலை சீர்கேடு உருவானாலும் இவ் நீதிக்கான நடைப்பயணத்தை வெற்றிகரமாக முடிப்போம் என்று உறுதிமொழியுடன் எமது அனைத்து தமிழ் மக்களும் தமது ஆதரவுகளை வழங்கவேண்டும் என்று கேட்பதோடு, ஒன்றுசேர்ந்து வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்கள்.
தற்பொழுது ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள கடும்குளிரையும் பொருட்படுத்தாது எமது தமிழ் மக்கள் எதிர்நோக்கிய துன்பங்கள், அவர்களுக்கு நடந்த அவலங்கள், கொடுமைகள் ஆகியவற்றை மனதில்கொண்டு இவ்வாறு எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை உலகத்திற்கு வெளிக்க்காட்டுவதட்கு இவ் நீதிக்கான நடைப்பயணத்தை தொடங்கினர்.
பல ஐ நா உறப்பினர்கள் (ஐக்கிய நாடுகள் சபை) இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை (Genocide ,war crimes investication), போர்க்குற்றங்களை ஆராய வேண்டும் என்று வலியுறுத்தியும், இதற்கான செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் காற்றுவாக்கில் விட்ட சபதம் போல காணமல் போனது தமிழ் மக்கள் அனைவரும் அறிந்ததே.
காலங்கள் உருண்டுகொண்டே போகின்றதே தவிர எமது மக்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு உலகம் சரியான நடவடிக்கைகள் எடுக்காததால் “நாங்கள் மீண்டும் பலமாக ஒன்றுசேர்ந்து எழுந்து ஓங்கி குரல் கொடுப்போம்” இம்முறை நிச்சயம் உலகம் எமது பிரச்சனைகளை செவி சாய்க்கும் என்ற நம்பிக்கையுடன் எமது மக்களுக்காக ஓங்கி குரல் கொடுப்போம்.
மக்கள் ஒன்றுபட்டு குரல் கொடுத்தால் உலகம் நிச்சயமாக எமது பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Walk For Justice Team
France
http://walk-for-justice.org
http://youtu.be/iMFhu-nUcMs