Search

உதயசூரியனின் 57வது ஆண்டு நிறைவு கரப்பந்து வெற்றி கிண்ணத்தை நேதாஜி மகளீர்,ஆண் அணியினர்கள் வெற்றி கொடார்கள்

உதயசூரியனின் 57வது ஆண்டு நிறைவு கரப்பந்து வெற்றி கிண்ணத்தை நேதாஜி மகளீர்,ஆண் அணியினர்கள் வெற்றி கொடார்கள்.

உதயசூரியனின் 57வது ஆண்டு நிறைவு கிண்ணம் வென்றது நேதாஜி மகளீர்…

வல்வை உதயசூரியன் கழகம் தமது 57ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, வல்வை விளையாட்டு கழகத்திற்கு உற்பட்ட சகோதர கழகங்களுக்கிடையில் நடாத்துகின்ற பெரு விளையாட்டுக்களின் வரிசையில் முதல் நிகழ்வாக மகளீருக்கான கரப்பந்தாட்டப்போட்டிகள், எமது சகோதர கழகமான நேதாஜி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.

வல்வை உற்பட்ட கழகங்களுக்கிடையிலான மகளீருக்கான கரப்பந்தாட்ட போட்டிகளில் பலம் பொருந்திய அணிகளாக திகழும் நேதாஜி மற்றும் சைனிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதியதால் ஆட்டம் களைகட்டியது.

இறுதிப்போட்டியில் நேதாஜி அணியினர் 02:01 என்ற செற் கணக்கில்  வெற்றி பெற்றது.

இரண்டாவது நிகழ்வாக ஆண்களுக்கான கரப்பந்தாட்டப்போட்டிகள்,

இறுதிப்போட்டியில் நேதாஜி வி.க, உதயசூரியன் கழகத்தினை எதிர் கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 25:22, 25:22 என்ற புள்ளிகள் அடிப்படையில் இரண்டு சுற்றுக்களையும் வெற்றி பெற்று சம்பியனை தனதாக்கியது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *