கொரியா தீபகற்ப பகுதியில் போர் மூளும் சூழ்நிலையை வடகொரியா ஏற்படுத்தி வருகிறது. இதனை முடிவிற்கு கொண்டுவர வேண்டுமானால் முதலில் ஐ.நா. பொருளாதாரத்தடையை நீக்கவேண்டும்.மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடனான பேச்சுவார்த்தைக்கு சில நிபந்தனைகளையும் அது விதித்துள்ளது. இதற்கு அணுஆயுத நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பாக, வடகொரியா தெளிவான அறிக்கைகள் வெளியிடவேண்டும் என்று அமெரிக்கா கூறியது. இந்நிலையில், உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் அணுஆயுத நடவடிக்கைகளை முதலில் நிறுத்தவேண்டும்.
அதற்கு முன்பு கொரிய தீபகற்ப பகுதியில் அணுஆயுத நடவடிக்கைகளை நிறுத்தவது குறித்து அமெரிக்கா நினைக்கக்கூடாது என்று பதிலடி கொடுத்து இருக்கிறது. அதுவரை அணுஆயுத நடவடிக்கைகள் தொடரும் என்றும் வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வடகொரியா மூன்றாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.