தலைவர்{செயலாளர்
பிரித்தானியா வல்வை நலன்புரிச் சங்கம்,
பிரித்தானியா.
06.02.2012
வாழ்வாதார, சுய தொழில் முயற்சி கொடுப்பனவு – 2011{2012
எமது கோரிக்கையை ஏற்று தங்களின் பிரித்தானிய வல்வை நலன்புரிச்சங்க நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட 178100{- எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. எம்மக்களின் வாழ்வாதாரத்துக்கு தங்களின் நல்லாதரவை வழங்கியதற்கு எமது வல்வை ஒன்றியத்தின் வல்வெட்டித்துறை நிர்வாகத்தின் சார்பிலும் வல்வை மக்களின் சார்பிலும் தங்களுக்கு எம்மனம் நிறைந்த நன்றியறிதலை தெரிவிக்கின்றோம் . மேலும் இக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு எதிர்வரும் வாரம் அளவில் விழாவாக நடத்த உள்ளோம். பிரித்தானியா வாழ் வல்வை மக்களுக்கும் இம்மாதம் நடைபெற இருக்கும் ஒன்று கூடலுக்கும் எமது நன்றியுடன் கூடிய நல் வாழ்த்துக்களைத் தெரிவித்து தங்களின் பணி எங்களின் உறவுகளுக்குத் தொடரும் என நம்பி இறைவனிடம் நல்லாசி வேண்டுகிறோம்.
மேலும் இதுவரை காலமும் எமது செயற்பாடுகள் திறம்பட நடைபெற ஒத்தாசை புரிந்த நடப்பு நிர்வாகத்திற்கு சிறப்பாக நன்றி தெரிவித்து விடைபெறுகிறோம்.
“நன்றி”