Facebook Game மற்றும் Application Request களை எப்படி தடுப்பது ?

Facebook Game மற்றும் Application Request களை எப்படி தடுப்பது ?

எப்போது நாம் பேஸ்புக்கில் நுழைந்தாலும் யாரேனும் நண்பர்கள் நமக்கு Game மற்றும் Application Request களை தந்திருப்பார்கள். அது போன்ற அழைப்புகளை நாம் விரும்பாவிட்டாலும் தொடர்ந்து வருவதை தடுக்க முடியாது.

உங்களுக்கு வந்திருக்கும் Request -கள் வலது புற Side Bar பகுதியில் இருக்கும்.

இப்போது அதன் மீது Mouse ஐ Hover செய்தால் வலது புறம் ஒரு சிறிய பெருக்கல் குறி (X) தோன்றும். அதன் மீது கிளிக் செய்யுங்கள்.

அதில் இரண்டு வசதிகள் இருக்கும் ஒன்று Remove All Requests மற்றொன்று Block. Block என்பதில் Game பெயரும் இருக்கும்.

Remove All Requests என்பதை கொடுத்தால் தற்போது வந்துள்ள Game மற்றும் Application Request கள் நீக்கப்பட்டு விடும். Block என்பதை கிளிக் செய்து பின்னர் Confirm செய்தால் குறிப்பிட்ட Game அல்லது Application ஐ நீங்கள் Block செய்து விடலாம்.

மறுபடி வேறு நண்பர்கள் குறிப்பிட்ட Game அல்லது Application Request ஐ உங்களுக்கு அனுப்பும் போது அது வராது.

Leave a Reply

Your email address will not be published.