Search

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவரா தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகியுள்ளமை மிகவும் உன்னதமானதொரு விடயமாக பார்க்கப்படுகின்றது.

உலக ஆசிரியர் பரிசு -2019 (Global Teacher Prize – 2019

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவரா தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகியுள்ளமை மிகவும் உன்னதமானதொரு விடயமாக பார்க்கப்படுகின்றது.

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகியுள்ளமை மிகவும் உன்னதமானதொரு விடயமாக பார்க்கப்படுகின்றது. இலங்கை தமிழர் என்ற முறையில் எமக்கும் மிகவும் பெருமை சேர்க்கின்ற விடயமாக இது அமைகின்றது.

முன்னதாக உலகின் தலைசிறந்த ஐம்பது ஆசிரியர்கள் என்ற நிலையினை எட்டிய இவர், தற்பொழுது பத்து ஆசிரியர்களுள் ஒருவராக முன்னேறி சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியானது அஸ்திரேலியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுவதாக அந்த நாட்டு தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்கள் பலவும் இந்த ஈழத்தமிழச்சியினை வெகுவாக பாராடுகின்றது. உலகின் தலை சிறந்த ஆசிரியர்களில் முதலாவதாக ஐம்பது இடங்களுக்குள்ளும், தற்பொழுது பத்து இடங்களுக்குள்ளும் யசோதை முன்னேறியமை அளப்பெரும் சாதனை என அந்த ஊடகங்கள் புகழ் மாலை பொழிகின்றது.

பத்து இறுதி தேர்வாளர்களில் முதலாவது நிலையினை பெறும் போது ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை இவர் பரிசாக பெறுவதற்கு வாய்ப்புண்டு, எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் நாளன்று இந்த சாதனைக்கான பரிசுத்தொகை முதலாம் இடத்தினை பெறுபவருக்கு டுபாயில் வைத்து வழங்கப்படும். இந்த வாய்ப்பும் இவருக்கே பெரும்பாலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யசோதை அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் உள்ள ரூட்டி ஹில் உயர்நிலைக் கல்லூரியில் ( Rooty Hill High School) வரலாறு, சமூகமும் கலாச்சாரமும், புவியியல் பாடங்களை கற்பிக்கும் ஓர் ஆசிரியர். இக் கல்லூரியில் கல்விகற்கும் 80வீதமான மாணவர்கள் அகதிகளாகவும், புலம்பெயர்வாளர்களாகவுமே உள்ளனர், அகதிகள், புலம்பெயர்வாளர்கள் மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் சமத்துவமான கல்வி மேன்பாட்டுக்காக அவர் தினமும் அங்கு அயராது உழைப்பதாகவும், கற்பித்தல் சம்பந்தமான தனது சில தனிப்பட்ட செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

குறிப்பாக ஆஸ்திரேலிய பழங்குடியினர் கல்வியின் மீது மிகவும் நாட்டம் குறைந்தவர்கள், மிகவும் பின்னிலையிலுள்ள ஓர் சமூகம், இவருடைய. கல்லூரியில் 65 பழங்குடி மாணவர்கள் கல்வியை விரும்பிக் கற்பதற்கு யசோதை காரணமாக இருந்ததுடன் அங்குள்ள பழங்குடி இன மக்களிடையே கல்வி குறித்த தேவையினை உணரவைத்து, பல்கலைக்கழகம் செல்லவேண்டும் என்ற அவாவினை ஊட்டியமை உள்ளிட்ட இவரது முதன்மை செயற்பாடுகள் பலவும் ஆஸ்திரேலிய ஊடகங்களினால் சுட்டிக்காட்டப்பட்டு இவர் புகழப்பட்டு வருகின்றார்.

179 நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகலிலிருந்தே இந்த பத்து பேரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 2010 ல் உருவாக்கப்படட இலண்டனை தலைமையக்கமாகக் கொண்ட ” The Varkey Foundation ” எனும் அமைப்பே இந்த நிகழ்வினை கடந்த ஐந்து வருடங்களாக நடாத்திவருகின்றது.

எதிர்வரும் மார்ச் 24 ம் திகதியில் அறிவிக்கப்படும் முதல் பரிசினையும் இவரே பெற்று தன் பாடசாலைக்கும், தன் குடும்பத்திற்கும், தமிழ் சமூகத்திற்கும், ஆஸ்திரேலிய நாட்டிற்கும் மேலும் பெருமை சேர்க்க வேண்டுமென நாமும் வாழ்த்துவோம் நண்பர்களே…!!

Global Teacher Prize 2019 Top 10 Finalist – Yasodai Selvakumaran, Rooty Hill High School, Sydney.

Aiming to be the best in the world: Sydney teacher in line to win $1 million prize:

Yasodai Selvakumaran, 31, A Tamil Sri Lankan-born Australian, Yasodai’s parents left Sri Lanka amongst growing civil tensions, and she grew up in rural and regional Australia before moving to Sydney to complete university study.

Over the past nine years, Yasodai Selvakumaran has seen education and the role of teachers change dramatically as Australia shifts its approach to schooling and gains recognition on the international stage.

She is the only Australian teacher to be listed as a top 10 finalist for this year’s $1 million Global Teacher Prize, which received over 10,000 nominations from 179 countries.

The history, society and culture and geography teacher said the announcement is “an amazing testament to Rooty Hill High and also teachers across Australia”.

“We’ve had a number of teachers in the top 50 and in the top 10 and it just says a lot about teaching in Australia on a global scale,” Ms Selvakumaran said.

Ms Selvakumaran won the Commonwealth Bank Teaching Award last year, was part of the International Congress for School Effectiveness and Improvement in Norway last year, completed a study tour in Singapore and co-presented her findings to the NSW Department of Education and did a masters-level subject in education research.

Ms Selvakumaran was born in Sri Lanka and spent some of her childhood in Hay, in south western NSW before moving to Bathurst. She said she has always been surrounded by passionate educators.

“I was really inspired to become a teacher by my teachers at Bathurst High School, they had a huge impact on me, not just in terms of subjects but they took a real interest in us as young people and provided a real sense of support,” Ms Selvakumaran said.

“Growing up, my maternal grandparents were teachers in Sri Lanka and whenever they came and visited, they would always get ex-students coming to see them.

“Even now, when I go to events, people know my grandparents, even though that was overseas, and talk about how they were taught by them and what that was like.”
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *