சிதம்பராக்கல்லூரி: தோற்றமும் வளர்ச்சியும்,பகுதி3

சிதம்பராக்கல்லூரி: தோற்றமும் வளர்ச்சியும்,பகுதி3
விளையாட்டுத்துறை
சிதம்பரக்கல்லூரி தனது வரலாற்றில் பல துறைகளிலும் சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. இவ்வாறே விளையாட்டுத் துறையிலும் வியத்தகு சிறந்த சாதனைகளை நிலை நாட்டியுள்ளது. முன்னைய காலங்களில் இக்கல்லூரி மாணவர்கள் அகில இலங்கை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வீரர்களாகத் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பாக கரப்பந்தாட்டத்தில் தேசிய தரத்தை அடைந்தமையும் கல்லூரி வரலாற்றில் மறக்கமுடியாத சாதனைகளாகும். தரமானஇ சொந்தமான விளையாட்டு மைதானம்இ போதிய விளையாட்டு உபகரணங்கள் இன்றி விளையாட்டுப் போட்டிகள் (மெய்வல்லுநர் போட்டிஇ கரப்பந்தாட்டம்இ உதைபந்தாட்டம்) நடாத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலும் எமது கல்லூரி மாணவர்கள் புரிந்துள்ள சாதனைகள் சிலவற்றை இங்கு குறிப்பிடவேண்டும்.

அ) கரப்பந்தாட்டம்
  1) 1948 ம் வருடம் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் எமது கல்லூரி வீரர்கள் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் (சுரnநெசள ரி) பெற்றுக் கொண்டதை முதலில் குறிப்பிட வேண்டும்.
2) 1951 ம் வருடம் எமது கல்லூரி வீரர்கள் அகில இலங்கை ரீதியில் நடந்த கரப்பந்தாட்டப் போட்டியில் பங்கு கொண்டு முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டது அடுத்துக் குறிப்பிட வேண்டும். இந்தப் போட்டியில் திருவாளர்கள் எஸ்.ஏ.துரைசிங்கம்(அணித்தலைவர்) நாதன் என்று அழைக்கப்படும் சீ.பத்மநாதன்இ வீ.சபாபதிப்பிள்ளைஇ விஜயன் என அழைக்கப்படும் ஆர்.சோமசுந்தரம்இ எஸ்.கணபதிப்பிள்ளைஇ வெ.பொன்னம்பலம் ஆகியோர் திறமையாக விளையாடி எமது கல்லூரிக்குப் புகழை ஈட்டித் தந்துள்ளார்கள். இவர்கள் இந்த வெற்றியை பெற்றுத் தந்தமைக்கு ஆசிரியர்களான திரு.பொ.பாலசுப்பிரமணியம்இ திரு.எஸ்.ஆர்.அரியரெத்தினம் ஆகியோர் பயிற்றுவிப்பாளர்களாக இருந்து உதவி புரிந்துள்ளார்கள். மேற்படி கரப்பந்தாட்டப்போட்டியில் எமது கல்லூரி வீரர்கள் ஹன்வெல்ல சென்.ஜோன்ஸ் பொஸ்கோ கல்லூரிக்கு எதிராக விளையாடி வெற்றியீட்டினார்கள். இக்கல்லூரி மாணவர்கள் பிறிதொரு தடவை வல்வைக்கு விஜயம் செய்து மீண்டும் எமது கல்லூரி குழுவினருடன் விளையாடிய மூன்று போட்டிகளில் எமது கல்லூரி இரண்டில் வெற்றியீட்டியது. எமது கல்லூரியின் இதே குழுவினர் கொழும்புத் திட்டப் பொருட்காட்சியின் போதும் ஆறு குழுக்களுக்கெதிராக விளையாடிய போட்டிகளில் பலப்பிட்டியஇ கம்பஹாஇ மீரிகமஇ துடல்ல ஆகிய குழுக்களை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
3) 1955ம் வருடம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப்போட்டியில் பங்கு கொண்டு வெற்றியீட்டினார்கள்.
4) 1959ம் வருடம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றி பங்குபற்றிய ஐந்து போட்டிகளிலும் வெற்றியீட்டி சுழல் கோப்பையை சுவீகரித்துக் கொண்டமையும் நாம் பெருமைப்படக்கூடியதொன்றாகும். அதே நேரம் இந்தப் போட்டிகள் உரிய வேளையில் முடிவுறாது போனமையினால் எமது கல்லூரி அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெறும் சுற்றுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தது.
5) மேற்படி சங்கத்தினால் 1961-1966 ம் வருட காலப்பகுதிகளில் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப்போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றியீட்டியதுடன் 1964-1966 ம் வருட காலப்பகுதிகளில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றியீட்டியது.
6) 1966ம் வருடம் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் எமது கல்லூரி அரை இறுதிப் போட்டியிலும் கலந்து கொண்டு துரதிஷ்டவசமாக வெற்றியீட்டும் வாய்ப்பை இழந்தது. களுத்துறையில் நடைபெற்ற இந்த அரையிறுதிப் போட்டியில் 16க்குப் 14இ 15க்குப் 13 என்ற புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தைப் பெறும் வாய்ப்பை எமது கல்லூரி இழந்தது.
7) வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் 1967ம் வருடம் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப்போட்டியில் வெற்றியீட்டியதுடன்இ கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான போட்டியிலும் கலந்து கொண்டது.
8) 1968ம் வருடம் கல்வியமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட கரப்பந்தாட்டப்போட்டியில் பங்குபற்றி முதலாமிடத்தைப் பெற்று ‘நவீனவிக்னானி’ கேடயத்தையும் எமது கல்லூரிக் குழுவினர் சுவீகரித்துக் கொண்டார்கள்.
9) கரப்பந்தாட்டப் போட்டியில் சிலகாலம் எமது குழுவினர் பிரகாசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்த போதும் முன்பு இருந்த நிலையை மீண்டும் நிலைநாட்டும் முகமாக மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தும் கூட இருப்பவர்களைக் கொண்டு பயிற்றுவித்து கோட்ட மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டியதுடன் மட்டுமல்லாமல் வலய மட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டதையும் குறிப்பிட வேண்டும்.
ஆ) உதைபந்தாட்டம்
  1) 1956ம் வருடம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டியில் எமது கல்லூரி (1ளவ நுடுநுஏநுN) முதற் பிரிவினர் கலந்து கொண்டு வெற்றியீட்டியதுடன் யாழ் உதைபந்நதாட்டச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டியிலும் பங்குபற்றும் தகுதியைப் பெற்றுக் கொண்டார்கள்.
2) 1957ம் வருடம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால்; நடாத்தப்பட்ட போட்டியில் கல்லூரியின (3சன  நுடுநுஏநுN) மூன்றாம் பிரிவினர் பங்குபற்றி வெற்றியீட்டியுள்ளார்கள்.
3)  1959ம் வருடம் யாழ் உதைபந்தாட்டச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட சுற்றுப் போட்டியில் கல்லூரியின் (1ளவ நுடுநுஏநுN) முதற் பிரிவினர் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடிக்கொண்டார்கள்.
4) 1961ம் வருடம் யாழ்ப்பாண பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தால் நடாத்தப்பட்ட போட்டியில் கல்லூரியின் (1ளவ நுடுநுஏநுN) முதற் பிரிவு பங்கு கொண்டு வெற்றியீட்டியது.
5) எமது கல்லூரி உதைபந்தாட்டக் குழுவில் கோல் காப்பாளராக இருந்த திரு.ஏ.ஆர். இரத்தினசிங்கம் அவர்கள் 1965 ம் வருட காலப்பகுதிகளில் யாழ்மாவட்ட உதைபந்தாட்டக் குழுவிற்கு தொடர்ச்சியாக மூன்று வருடம் கோல் காப்பாளராக இருந்ததையும் குறிப்பிடுவதில் கல்லூரி பெருமையடைகிறது.
6) 1967 ஆம் வருடம் யாழ் உதைபந்தாட்டச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட சுற்றுப் போட்டியில் கல்லூரியின் உதைபந்தாட்டக் குழுவினர் பங்கு கொண்டு வெற்றியீட்டினார்கள்.
7) 1995ஆம் வருடம் மாவட்ட மட்டப்போட்டியில் கல்லூரியின் 1ம் அணியினர் பங்குபற்றி விளையாடி வரும் சந்தர்ப்பத்தில் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக போட்டிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டமையினால் வெற்றியீட்டும் வாய்ப்பினை கல்லூரி இழந்தது.
8) எமது கல்லூரி மாணவர்கள் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் உதைபந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்டு சாதனை புரிந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும். லண்டனில் இயங்கி வரும் யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களின் பாடசாலைகளின் பழைய மாணவர்களுக்கிடையே 1995ஆம் வருடம் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டப் போட்டியில் சிதம்பராவின் பழைய மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டார்கள்.
இ) மெய்வல்லுநர் போட்டிகள்.
1) 1949ம் வருடம் யாழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் கல்லூரி மாணவன் எஸ்.ஏ.துரைசிங்கம் 100 யார்இ 200 யார் ஓட்டப் போட்டிகளில் பங்கு கொண்டு இரண்டிலுமே முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற போட்டிகளிலும் கலந்து கொண்டார்.
2) 1955ம் வருடம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் எமது கல்லூரி மாணவர்கள் பங்கு கொண்டு பல வெற்றிக் கிண்ணங்களைச் சுவீகரித்துக் கொண்டார்கள். இ.துரைலிங்கம் அவர்கள் தத்திமிதித்துப் பாய்தல்இ குண்டெறிதல்இபரிவட்டம் எறிதல் ஆகிய மூன்று போட்டிகளில் பங்குபற்றி மூன்றிலுமே முதலாமிடத்தைப் பெற்று வெற்றி வீரர் (ஊர்யுஆPஐழுN) ஆனார். யாழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட போட்டிகளிலும் பங்குபற்றிஇ தத்திமிதித்துப் பாய்தலில் இரண்டாம் இடத்தையும்இ குண்டெறிதல்இபரிவட்டம் எறிதல் ஆகிய இரண்டிலும் 3ம் இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளிலும் கலந்து கொண்டார். இதே வருடம் அ.வி.அருணாசலம் அவர்களும் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் நீளம் பாய்தல்இ ஒரு மைல்இ அரை மைல் ஓட்டப்போட்டிகளில் கலந்து கொண்டு நீளம் பாய்தலிலும்இ ஒரு மைல்இ ஓட்டப்போட்டியிலும் 1ம் இடத்தையும்இ அரை மைல் ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார். யாழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளிலும் கலந்து கொண்டு நீளம் பாய்தல்இ அரை மைல் ஓட்டம் ஆகியவற்றில் இரண்டாமிடத்தையும் பெற்று அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளிலும் கலந்து கொண்டார்.
3) ஐ) 1963 ஆம் வருடம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டியில் 13 வயதுக்குக் கீழ்ப்பட்டோர் பிரிவில் திரு.கே.எஸ்.சிவனருள்சுந்தரம் பங்குகொண்டு 100 யார் ஓட்டப் போட்டியில் 12.7 செக்கனில் ஓடி முடித்து புதிய சாதனையை நிலைநாட்டினார். அதே வருடம் யாழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளிலும் பங்குகொண்டு உயரம் பாய்தலில் 4அடி 9 அங்குலம் பாய்ந்து புதிய சாதனையை நிலைநாட்டினார்.
ஐஐ) 1964 ம்வருடம் அகில இலங்கை ரீதியில் கொழும்பில் நடைபெற்ற போட்டியி;ல் திரு.கே.எஸ்.சிவனருள்சுந்தரம் பங்குகொண்டு உயரம் பாய்தலில் இரண்டாமிடம் பெற்றுக் கொண்டதையும் குறிப்பிட வேண்டும்.
ஐஐஐ) 1965 ஆம் வருடம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் திரு.கே.எஸ்.சிவனருள்சுந்தரம் கலந்து கொண்டு 200 மீற்றர்இ 100 மீற்றர் ஓட்டப்பந்தயங்களிலும்இ நீளம் பாய்தலிலும்இ முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் இப்பந்தயங்களில் புதிய சாதனையையும் நிலைநாட்டியுள்ளார். இதே வருடம் யாழ் விளையாட்டுச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட போட்டிகளிலும் மேற்படி போட்டிகளில் பங்குபற்றி முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டதோடு 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தினை 25.3 செக்கனில் ஓடி முடித்து புதிய சாதனையையும் நிலைநாட்டினார். அதே வருடம் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் பங்கு கொண்டு நீளம் பாய்தலில் 1ம் இடத்தையும்இ 200 மீற்றர் ஓட்டத்தில் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டார்.
4) திரு.கே. பாலசிங்கம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் 1963ம் வருடம் நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்கு கொண்டு ஒரு மைல்இ அரை மைல் ஓட்டப்போட்டிகளில் 2ம் இடத்தைப் பெற்று அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளிலும் பங்குபற்றினார்.
5) திரு.ப.விஜயராசா 1971ம் வருடம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்டு 100 யார்இ 200 யார் ஓட்டப் போட்டிகளில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டதுடன்இ யாழ் பாடசாலைகள் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளிலும் பங்குகொண்டு மேற்படி இரண்டு ஓட்டங்களிலும் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டு அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்குபற்றினார்.
6) திரு.கி.நிரஞ்சன் 1971ம் வருடம் யாழ் பாடசாலை ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொண்டு பரிவட்டம் எறிதலில் 1ம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
7) திரு.ஏ.அருள்பவான் 1970ஆம் வருடம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் ஒரு மைல்இ அரை மைல் ஓட்டப்போட்டிகளில் பங்கு கொண்டு 1ஆம் இடத்தையும்இ என்.ரீ. நாகேஸ்வரன் 100 யார்இ 200 யார் ஓட்டப் போட்டியில் 1ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
8) 1992 ஆம் வருடம் நடாத்தப்பட்ட மாவட்ட மட்டத்திலான போட்டியில் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் தத்திமிதித்துப் பாய்தலில் செல்வன்.இ.சாந்தரூபன் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.
9) 1995ஆம் வருடம் நடாத்தப்பட்ட மாவட்ட மட்டத்திலான போட்டியில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் செல்வன் த.சதீஸ்குமார் 500 மீற்றர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.
விளையாட்டுத் துறையில் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடத்தைப் பெற்றுக் கொண்டதோடு நில்லாமல் தாம் கல்லூரியை விட்டு விலகிய பின்னரும் மாணவர்களுக்குப் பயிற்சியை வழங்கியும்இ வெள்ளிக் கேடயங்களையும்இ வெள்ளிக் கோப்பைகளையும் வழங்கியுமுள்ளார்கள். பயிற்சியை வழங்கியவர்களில் சிறந்த விளையாட்டு வீரராக இருந்து அகால மரணமான திரு.அ.வி.அருணாசலம் அவர்களும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிதம்பராக்கல்லூரி: தோற்றமும் வளர்ச்சியும்,பகுதி 2

http://www.vvtuk.com/archives/2659

Leave a Reply

Your email address will not be published.