இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லையில், ஐ.நா. பொதுச்செயலர் மீது பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் ஷு, மற்றும் கற்களை வீசினர். இஸ்ரேல்-பாலஸ்தீன நாடுகளின் பிரச்சினையில் ஐ.நா.வின் செயல்பாட்டை கண்டித்து இத்தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லைப்பகுதியான காஸாவில் கட்டப்பட்டுள்ள வீட்டுவசதி திட்டத்தை துவக்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன், இதில் கலந்து கொள்ள காஸா பகுதிக்கு வருகை தந்தார். அப்போது, 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் பான்கீமூனின் கார் வரும் கன்வாய் வழியாக அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும் சிலர் அவர் சென்ற கார் மீது ஷு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் பான்கீமூ னுக்கு எந்த வித காயமும் ஏற்படவில் லை. இந்த சம்பவம் தொடர்பாக 50 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இவர்கள், இஸ்ரேல் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆவர்.
இஸ்ரேல்-பாலஸ்தீன நாடுகளின் பிரச்சினையில் ஐ.நா.வின் செயல்பாட்டை கண்டித்து இத்தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீன் நாடுகளின் பிரச்சினை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே பாங்கி மூன் எமது மக்கள் முள்ளவாய்க்காலில் இனப்படுகொலைக்கு உள்ளானபோது புன்சிரிப்புடன் மௌனமாக இருந்தவர்.அதன்பின்னர் சிங்களஅரசின் விருந்தினராக சென்று வந்தவர்.
இவருக்கு எறியப்பட்ட பாதணியில் பாலஸ்தீனர்களின் கோபம்மட்டும் அல்ல.ஈழத்துமக்களின் ஆறாத
கோபமும் தீராத வடுவும் இருக்கின்றது.