Search

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் எதிர் வரும் 03/01/2020 வெள்ளிக்கிழமை அன்று புலமைப்பரீட்சைக்கான இலவச வகுப்புகளை ஆரம்பமாகவுள்ளது.

கல்வியே கண்

எமது வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் எதிர் வரும் 03/01/2020 வெள்ளிக்கிழமை அன்று புலமைப்பரீட்சைக்கான இலவச வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு அமைவாக 2020 ம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு தோற்றுவிக்கும் 5 ம் தர மாணவர்களையும் மற்றும்
2021 ம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு தோற்றுவிக்கும் 4 ம் தர மாணவர்களையும் சேர்த்து கொள்வதாய் தீர்மானித்துள்ளோம்,

ஆகவே பெற்றோர்களாகிய நீங்கள் வாரம் தோறும் வரும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4மணி தொடக்கம் மாலை 6 மணிவரை எமது நிலையத்தில் உங்கள் பிள்ளைகளின் பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வகுப்புகள் தொடங்கும் முன் பெற்றோர்களுடன் வகுப்புகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை நடத்த வேண்டியிருப்பதால் உங்கள் பதிவுகளை 15/12/2019க்கு முன்பதாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் நீங்களும் உங்கள் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி எமது மாணவர்களின் கல்வி தரத்தை மென்மேலும் வளர்ச்சி பாதையில் முன்னெடுத்து செல்வதற்கு உறுதுணையாக எம்மோடு பயணிப்பீர்களாக.

மற்றும் *யோகா* வகுப்புக்களும் ஆரம்பிக்கப்படவுள்ளன மேல் குறிப்பிட்ட தினங்களில் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பதிவினை மேற்கொள்ளாம்.

எண்ணும் எழுத்தும் கண்ணென கொள்

நன்றி

பா. சிவகணேஷ்,
செயலாளர்
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம்,
02/12/2019.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *