காசுக்காக இரகசியமாக கைகோர்த்த கலைஞரும் ஜெயாவும்..

காசுக்காக இரகசியமாக கைகோர்த்த கலைஞரும் ஜெயாவும்..

ஒரு செலக்டர் மட்டையில் ஊறப்போகும் இரண்டு குட்டைகள்…

ஐரோப்பாவில் கலைஞர் தொலைக்காட்சியும் ஜெயா தொலைக்காட்சியும் இனி ஒரே செலக்டர் மட்டையில் விற்பனையாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த திங்கள் 6ம் திகதியில் இருந்து கலைஞர் ஐங்கரன் தொலைக்காட்சியுடன் இணைந்து ஜெயா தொலைக்காட்சியும் ஒரே கட்டணத்தில் ஒளிபரப்பாக உள்ளதாக இரு தொலைக்காட்சிகளிலும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கலைஞரும், ஜெயாவும் ஒன்றாக இருக்க முடியாது சட்டசபையையே மாற்றினார்கள். ஜெயா முதல்வராக இருந்தால் கலைஞர் சட்டசபைக்கு வரமாட்டார். கலைஞர் முதல்வராக இருந்தால் ஜெயா சட்டசபை வரமாட்டார். ஆனால் ஐரோப்பாவில் கலைஞர் ரீ.வியும், ஜெயா ரீவியும் காசுக்காக ஒன்றுபட முடியும் என்று கூறியிருப்பது சிலருக்கு புதுமையாக இருக்கலாம். ஆனால் அது ஐரோப்பாவில் நிதர்சனமாகியுள்ளது.

மக்களை ஏமாற்றுவதற்காகவே ஜெயலலிதாவும் கலைஞரும் மோதுகிறார்கள் ஆனால் இவர்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று அடிக்கடி விமர்சனங்கள் வருவதுண்டு. ஆனால் இவர்கள் இருவரும் 600 குறோணர் விலையில் விற்பனையாகும் ஒரு தொலைக்காட்சி மட்டையில் ஊறிய குட்டைகளாகியிருப்பதுதான் சற்று சிந்திக்கத் தோன்றுகிறது.

2 ஜி குற்றச்சாட்டில் பெருந்தொகை ஊழல் பணத்தில் உருவானதாக குற்றம் சுமத்திய கலைஞர் ரீவியுடன் ஜெயா சமரசம் கண்டுள்ளதென்றால் நடப்பது என்ன…?

கேள்வி : ஜெயலலிதாவை திமுக விலை கொடுத்து வாங்கிவிட்டதா..?

விடைகாண மேலும் பல செய்தி துணுக்குகளை இங்கு வரிசைப்படுத்துவோம்…

01. சன் டிவியிடம் சசிகலா குடும்பம் பெருந்தொகை பணத்தை வாங்கி அவர்களை வழமைபோல இயங்க அனுமதித்தனர்.

02. சன் டிவியை சேர்ந்த தயாநிதி மாறன் 600 கோடி ருபாவை ராசாத்தி அம்மாள் காலில் கொட்டித்தான் அமைச்சர் பதவி பெற்றார். அதுபோல சன் டிவியையும் இயங்க அனுமதி பெற்றார் – சீமான்

03. ஜெயலலிதாவின் பரம விரோதியான ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் திரைப்பட ரெய்லர் இப்போது அதிகம் காண்பிக்கப்படுவது ஜெ.ரீவியில்தான்.. ஏன்..எப்படி..?

04. அழகிரி சம்மந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் கொலை வழக்கு பற்றி இப்போது ஜெ. அடக்கி வாசிப்பது ஏன்.. ?

05. எதை வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் சாரய ஊழலை மட்டும் மக்கள் மத்தியில் பேசக்கூடாது. எம்.ஜி.ஆர் சாராய ஊழலில் சம்பாதிக்கும் பணத்தில் 25 வீதம் மு.கருணாநிதிக்கு கொடுத்து சமரசம் கண்டார். ஊழலழில் இரு கட்சிகளும் இரகசியமாக கை கோர்த்துள்ளன – சோ ராமசாமி எம்.ஜி.ஆர் காலத்தில் துக்ளக்கில் எழுதியது.

06. ஜெ ஆட்சிக்கு வந்தால் சன் ரீவி கிடுக்கிப் பிடிக்குள் வந்துவிடும் என்றார்கள்.. வரவில்லை.. ஏன்…?

சந்தேகங்கள்…

01. காங்கிரஸ் தலைவர்கள் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசி இந்த இடைநிலை தரகை செய்துள்ளார்களா..?

02. சசிகலா வெளியேற்றம் இந்த இரகசியங்களை மூடி மறைக்க ஒரு போலி நாடகமா…?

03. தினம் ஒரு கடிதம் எழுதிக் கூத்தாடும் கருணாநிதி சில காலமாக அடக்கி வாசிப்பது ஏன்..?

04. விஷயம் அதிகம் தெரியாத விஜயகாந்தை சஸ்பெண்ட் செய்து, திமுகவை கைவிட்டது ஏன்..? இது இன்னொரு கவனத் திசை திருப்பலா..?

இவைகள் பத்திரிகைகளில் நாம் படித்த செய்திகள்…

இனி

ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்…

ஐரோப்பாவில் கலைஞரும், ஜெயாவும் ஒரு மட்டைக்குள் சங்கமமாவது அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சனை..

ஆனால்…

எங்கோ ஓரிடத்தில் இடிக்கிறது…

மு.கருணாநிதி பாணியில் ஜெயலலிதாவும் தமிழக மக்கள் காதில் பூ சுற்ற ஆரம்பித்துவிட்டாரா.. ?

தமிழக ஊடகங்கள் சிந்திக்க வேண்டிய இடம் இது..

இது சரியானால்… காங்கிரசுக்கும் ஜெ. ஏதாவது நன்மை செய்ய வேண்டும். சீமானை கைது செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் தொடர்ந்து கோரி வருகிறது. திரைமறைவு கோரிக்கையை ஏற்று தேர்தல் நெருங்க சீமானுக்கு ஜெயலலிதா ஆப்பு வைப்பார்…

அன்று..

அ.தி.மு.க – தி.மு.க இரண்டும் ஒரு சாக்கடையில் ஊறிய மட்டைகள்..

இன்று..

ஒரு மட்டையில் ஊறிய இரண்டு சாக்கடைகள்..

அண்ணா நூற்றாண்டில் இரு கட்சிகளும் அடைந்த புதிய மாற்றம் இதுதான்..

அலைகள் தென்னாசிய சிந்தனைப் பிரிவு 08.02.2012

Leave a Reply

Your email address will not be published.