மரண அறிவித்தல்
பிறப்பு : 01.02.1945 இறப்பு : 06.02.2020
திருமதி மதனசுந்தரம் தவமணி ( புவனம் அக்கா )
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும், London Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட மதனசுந்தரம் தவமணி (புவனம் அக்கா) 06.02.2020 மதியம் 12.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற குருநாதப்பிள்ளை மதனசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ் சென்ற சின்னத்துரை தங்கம்மாவின் மகளும், குருநாதபிள்ளை காமாட்சி அம்மாவின் அன்பு மருமகளும், சின்னையா தேவகுஞ்சரத்தின் சகோதரியும் ஆவார்.
ஸ்ரீதரன், ஸ்ரீலஷ்மியின் அன்புத் தாயாரும், சௌந்தரராஜன்,வளர்மதியின் பாசமிகு மாமியாரும், சந்தோஸ், சாருதாஸ், அபிராமி,ஸ்ரீராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23.02.2020 ஞாயிறு காலை 8.00 மணி முதல் 10.30மணி வரை Tooting and Mitcham Community Sports Club, Bishapsford Road, Morden,Surrey,SM4 6BF எனும் முகவரியில் ஈமைக்கிரியை அஞ்சலி செலுத்தப்பட்டு, மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை Streatham park Crematorium,Rowan Road, London, SW16 5JG எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
மகன் – ஸ்ரீதரன் – 07801 227110
மகள்- ஸ்ரீலக்ஷ்மி- 07449 92582