Search

4 தமிழக மீனவர்களை கைது!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துவிட்டு நேற்று காலை கரை திரும்பிக்கொண்டிருந்த போது 4 மீனவர்களை இலங்கை படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் 4 பேரும் இலங்கை யாழ்ப்பாணம் கடற்படை முகாமில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையினர் நேற்று முன் தினம் தமிழக மீனவர்களை மீன்பிடிக்கவிடாமல் இடையூறு செய்த நிலையில் நேற்று சிறைபிடித்துச் சென்றிருக்கின்றனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த உறவினர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published.