வரலாறு எனது வழிகாட்டி என்ற தேசியதலைவரின் மேற்கோளுக்கு இணங்க தமிழீழவிடுதலைப்போராட்ட
த்தின் பதிவுகளை மீளவும் எடுத்து vvtuk.com இணையம் வழங்குகின்றது.
இன்று தமிழீழவிடுதலைப்போராட்டமானது ஆயுதரீதியாக தற்காலிகமாக மௌனமாகிவிட்டாலும் தமிழீழம் என்ற அரசியல்இலட்சியம் தமிழீழத்திலும் அதன் எல்லைகடந்து தமிழ்மக்களிடமும் ஒரு பெரும் இலட்சியவீச்சாக எழுந்துநிற்கின்றது.
இந்த மாற்றம் ஒருஇரவில் திடீரென நிகழ்ந்தது அல்ல.எண்ணற்ற மாவீரர்களின் உன்னதமான தியாகத்தாலும் தேசியதலைவரின் உறுதியான வழிகாட்டலாலுமே 30வருடஆயுத போராட்டத்தால் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதற்காக நிகழ்த்தப்பட்ட வீரவரலாறுகள்,மானிடவரலாறு காணாத அர்ப்பணங்கள் என்றுமே வீணாக போய்விடாது.
மக்களிலில் இருந்து புறப்பட்டு மக்களுடனேயே இருந்து மக்களுக்கான விடுதலைஅமைப்பாக வளர்ந்த
விடுதலைப்புலிகள் இயக்கத்தை திரளான மக்கள்மத்தியில் பெரும்சக்தியாக வளர்த்ததில் கேணல்கிட்டுவின்
பங்கு அளப்பரியது.
இவர்கள் மக்களின் போராளிகள்.மக்களால் நேசிக்கப்பட்ட போராளிகள்.
மக்கள் வெள்ளத்தில் கிட்டு என்ற போராளித்தளபதி…..