Search

17 மாவட்டங்களுக்கு 26 ஆம் திகதி 6 மணிவரை ஊரடங்குச்சட்டம்!

கொழும்பு, கம்பஹா, புத்தளம் , யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

பின்னர் நண்பகல் 12 மணி முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்குச்சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாட்டில் ஏனைய 17 மாவட்டங்களுக்கும் இன்று பிற்பகல் 2 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும். அதன்பின்னர் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டு 12 மணி முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *