Search

மரண அறிவித்தல் – திருமதி சாரதாதேவி சுந்தரலிங்கம்

மரண அறிவித்தல்

திருமதி சாரதாதேவி சுந்தரலிங்கம்

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, மயிலியதனையில் வசித்து, தற்பொழுது தென் இந்தியாவில் தமிழ்நாடு, திருச்சியில் வசித்தவருமான சாரதாதேவி சுந்தரலிங்கம் திருச்சியில், 31.03.2020 செவ்வாய்க்கிழமை கிழமை காலமானார்.
அன்னார் சுந்தரியண்ணா என்றழைக்கப்படும், இரத்தினசாமி சுந்தரலிங்கத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, சீதாலஷ்மி தம்பதியின் பாசம்மிக்க அன்பு மகளும், காலஞ்சென்ற இரத்தினசாமி ஜானகியம்மா தம்பதியின் அன்பு மருமகளும், இந்திரலிங்கம் (முரளி ), சாந்தினி (சாந்தி ), பவானி (பபி), பிரபாகரன் (கோபி ), ஹரிஹரன் (கண்ணன்), சத்தியா (அம்மு) ஆகியோரின் பாசம்மிக்க தாயாரும், காலஞ்சென்றவர்களான, கமலாதேவி முத்தையா, சுதர்சனராஜா , இந்திராதேவி சுந்தரலிங்கம், கிருஷ்ணகுமார், பிரேம்குமார் ( குட்டி ), மற்றும் நிர்மலாதேவி ( பேபி ), ஜெயகிருஷ்ணா (பாபு) ஆகியோரின் பாசம்மிக்க ஆசைசகோதரியும், மங்கையர்க்கரசி (குஞ்சு), அருமைத்துரை, மோகன், சாந்தினி ( சாந்தா), கலைச்செல்வி, ராமநாதன் (ராம் ), மற்றும் ரதீஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும், சுவாதி, வைஷாலி, அஷ்வினி, இந்துஜா, சந்தியா, மயுரன், திவாகர், சுவேனியா, சஞ்ஜீவ், கொளதம், விதுஷன், ஆர்த்தி, அருஷன், கோகுலன், அபிநயன், ஆகியோரின் அன்புப் பேத்தியும், செல்லக்குட்டி மாயாவின் பேரன்புமிக்க பூட்டியுமாவார். அன்னாரின் பூதவுடல் ஈமக்கிரியைகள், தமிழ்நாடு, திருச்சி, ஸ்ரீனிவாசநகர் 1st Cross Street, ஏதேன்ஸ் தோட்டம், இலக்கம் 11 இல்லத்தில் நடைபெற்று, இன்று 31ம் திகதி, இந்துப்பொதுமயானத்தில், பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் S. இந்திரலிங்கம் (முரளி)
லண்டன்
தொ. பேசி :00447940212215




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *