Search

இலங்கநாதன் செந்தூரனின் இறப்பு நீரில் மூழ்கி இடம் பெற்றுள்ளது என்று சட்ட மருத்துவ அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கநாதன் செந்தூரனின் இறப்பு நீரில் மூழ்கி இடம் பெற்றுள்ளது என்று சட்ட மருத்துவ அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

முதல் காணாமற்போன நிலையில் வல்வெட்டித்துறை மயிலியதனை கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை அவரது சடலம் கண்டறியப்பட்டது.

வல்வெட்டித்துறை மயிலியதனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்றிரவு 7.20 மணியளவில் கண்டுள்ளனர்.

அதுதொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அவர்கள் தகவல் வழங்கினர்.நேற்றிரவு 8.30 மணியளவில் அந்த இடத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கு காணப்பட்ட மணிப்பையிலிருந்த (பேர்ஸ்) தேசிய அடையாள அட்டையை வைத்து இலங்கநாதன் செந்தூரன் (வயது – 37) என்பவருடையது என்று உறுதி செய்தனர்.

சம்பவம் தொடர்பில் செந்தூரனின் வீட்டுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் உறவினர்கள், செந்தூரனின் நண்பர்களுடன் தொண்டமனாறு பகுதியில் அவரைத் தேடினர்.

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் செந்தூரன் மக்களுக்கான உதவிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பருத்தித்துறை நீதவானின் உத்தரவில் அவரது சடலம் மந்திகை வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் இன்று முற்பகல் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது

சடலத்தின் கழுத்து உள்பட உடலில் எந்த ஒரு அடி காயமும் இல்லை கடல் விலங்குகளால் சடலத்தில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன முகத்தில் உரசல் காயம் காணப்படுகின்றது

நுரையீரல் பெரிய அளவில் வீக்கம் அடைந்து உள்ளது ஆதலால் அவரது இறப்பு நீரில் மூழ்கி இடம் பெற்றுள்ளது என்று சட்ட மருத்துவ அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *