வற்றாப்பளை அம்மன் ஆலய வருடாந்த பொங்கலில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவில் பொதுமக்களை அனுமதிப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (13) நடைபெற்றது.
இதில் மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன், கரைத்துறைப்பற்று பிரதேச சபை செயலாளர், சுகாதாரத்துறை அதிகாரிகள், பொலிஸார், இராணுவத்தினர், ஆலய பரிபாலன சபையினர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
சுகாதார பிரிவினரின் ஆலோசனையின் பிரகாரம் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.