இன்றைய தினம் வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் தேவஸ்தான பிரதம குரு சிவஶ்ரீ.பரமேஸ்வர மனோகரசிவாச்சாரியாரின் அவர்களின் இளைய புதல்வன் சிவஶ்ரீ.மனோகரநிருபன் சிவாச்சாரியார் புங்குடுதீவு இறுப்பிட்டி துர்க்கையம்மன் தேவஸ்தானத்தில் வருடாந்த ப்ரம்மோற்சவத்தை நடாத்திவைத்துள்ளார்
இது இவருக்கு முதன்முதலாக அமையப்பெற்ற ப்ரம்மோற்சவம் ஆகும்.
இவர் வல்வெட்டித்துறையில் பிறந்து வளர்ந்து குருகுலக் கல்வியை முறையாக கற்று குருவிற்கான பட்டத்தினை முறையாக பெற்ற பின்னரே ஆறு கால பூசை வழிபாடுகளையும் திருவிழா கால உதவி அர்ச்சகராகப் பணியாற்றி இருந்த இவர் இன்று தனியாகவே பிரம்மோற்சவத்தை முதன்முதலாக நடத்தி வைத்துள்ளார்.
இவர் மென்மேலும் திருப்பணிகளில் சேவை செய்ய எமது வல்வை மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.