31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழ் அமரர் சண்முகம்பிள்ளை அன்னபாக்கியம் 23.07.2020
கடந்த 23/06/20 அன்று சிவபதமடைந்த
எமது குடும்ப குலவிளக்கு சண்முகம்பிள்ளை அன்னப்பாக்கியம்
மறைந்த செய்தி அறிந்து நேரில் கலந்துகொண்டும், தொலைபேசி வாயிலாகவும் அனுதாபச்செய்திகளை பகிர்ந்தும்
மற்றும் பல்வேறு வழிகளில் உதவிகள் புரிந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது அன்புத் தெய்வத்தின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும்
23/07/20 வியாழக்கிழமை அன்று அதிகாலை நறுவிலடி ஒழுங்கை, வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் செய்து பின் ஊறணி தீர்த்தக்கரையில் அஸ்தி கரைக்கப்படும்.
அன்று பகல் 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்
சபிண்டீகரணக் கிரியை மற்றும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும்
அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும்
கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
தகவல்:
குடும்பத்தினர்,
நறுவிலடி ஒழுங்கை,
வல்வெட்டித்துறை.
தொலைபேசி: 0094 776456139