டென்மார்க் வல்வை ஒன்றிய கோடைகால ஒன்றுகூடல் 2020
வல்வை உறவுகளுக்கு வணக்கம்
நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற கோடைகால ஒன்றுகூடலுக்கு வருகை தந்து சிறப்பித்த உள்ளங்களுக்கு நன்றிகள்.
புதியதோர் இடத்தில் கடற்கரையில் காலநிலை கொஞ்சம் இடையூறு செய்தாலும், ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. வர்ண பட்டங்கள் வானில் பறந்ததும் சிறப்பு.
எங்கள் ஊரின் ஒடியல் கூழ் மதிய உணவாகவும், இரவு உணவாக உடன் மீன் பொரியல், புளியாணத்துடன் சுடுசோறும் சிறப்பாக இருந்தது. வல்வையின் ஞாபகங்களை வெளிப்படுத்தியது.
ஒன்றுகூடல் சிறப்பாக அமைய சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு மீண்டும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் .
நிர்வாகம்
வல்வை ஒன்றியம் , டென்மார்க்