Search

வல்வெட்டித்துறை கலைஞர்களில் இவரும் ஒருவர் பழம்பெரும் தமிழ் கலைகளில் ஒன்றான காத்தவராயன் கூத்தில் களுக்காத்தானாக (கடைசிக்காத்தான்) திரு (செல்லத்துறை) ஞானகுரு, குமரன். அவர்கள் மெய்சிலிர்க்கும் வகையில் நடித்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வல்வெட்டித்துறை கலைஞர்களில் இவரும் ஒருவர் பழம்பெரும் தமிழ் கலைகளில் ஒன்றான காத்தவராயன் கூத்தில் களுக்காத்தானாக (கடைசிக்காத்தான்) திரு (செல்லத்துறை) ஞானகுரு குமரன். அவர்கள் மெய்சிலிர்க்கும் வகையில் நடித்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் நாடகமானது 2012 ஆம் ஆண்டின் இதே மாதத்தில் மன்னார் மாவட்டத்திலுள்ள முருங்கன் என்னும் இடத்தின் செம்மண் தீவு கிராமத்தில் ஆலய உற்சவ காலங்களில் விசேடமான ஒரு நாளில் நடைபெற்றது.

நாடகத்தின் இறுதிப்பகுதியில் காத்தான் ஆக வாதாடி கழு மரத்தில் ஏறும் காட்சி பிரமிக்க வைத்தது அக்களு மரமானது நாடக மேடையின் முன்பகுதியில் பார்வையாளர்கள் வீற்றிருந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது கிட்டத்தட்ட 14 அடி தொடக்கம் 16 அடி வரை உயரமுள்ள கழுமரமாக மின் அலங்காரங்களுடன் அமைக்கப்பட்டிருந்தது

இன்று எமது இணையதளத்தில் பணியாற்றி வரும் ஒருவரின்னாளே இச்செய்தி அங்கு சென்று சேகரிக்கப்பட்டது.

இவரின் தந்தையார் வல்வெட்டித்துறையில் பழம்பெரும் வர்த்தகர்களில் ஒருவரும் ஆவார். செல்லத்துறை ஞானகுரு இவர் ஆற்றிய சேவைகள் பலவாக இருப்பினும் யா வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு ஆற்றிய இணை சேவையொன்று குறிப்பிடத்தக்கது.வல்வை மகளிர் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இவரின் படமும் காணப்பட்டன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *