31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும் அமரர் இராசதுரை புஸ்பராஜா(ஆனந்தி அப்பா)
எமது தந்தையின் அந்தியேட்டிக்கிரியைகள் எதிர்வரும் 31.10.2020 சனிக்கிழமை அன்று அதிகாலை 5 மணியளவில் ஆலடி வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள எமது இல்லத்தில் நடைபெற்று “ஊறணி புனித தீர்த்தக் கடலில்” அஸ்தி கரைக்கப்பட்டு, சபிண்டீகரண கிரியைகள் அதேதினம் நண்பகல்12.00 மணியளவில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அப்பாவின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்…
கடந்த 01.10.2020 அன்று இறைபதமடைந்த எமது அன்புத்தந்தையின் மறைவுச்செய்தி அறிந்து எமது துயர்பகிர நேரில் கலந்துகொண்ட உற்றார்,உறவினர்,நண்பர்கள் மற்றும் அனைவருக்கும்,
அனுதாப செய்திகளை தொலைபேசி,குறுஞ்செய்தி,இணையத்தளங்கள்,சமூகவலைத்தளங்கள்,அஞ்சலிப்பிரசுரங்கள் மூலம் தெரிவித்தவர்களுக்கும், பலவேறு வகைகளிலும் இன்றுவரை எம்மோடு தோளோடு தோள் சேர்த்து கையோடு கைகோர்த்து நிற்கும் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்புடன்
-குடும்பத்தினர்-
வல்வெட்டித்துறை
(பி.கு:- சர்வதேசமெங்கும் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலையால் இவ்வறிவித்தலை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளுமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.)