இன்றைய காலநிலை மாற்றத்தினால் பெய்துவரும் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால், இரட்டை வாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான சிறிய மீன்கள் சின்ன சின்ன வாய்க்கால் தொடர்களில் காணப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் இரட்டை வாய்க்காலை மறந்துவிட முடியுமா…? இந்த உலகமே அழித்த அறிந்த ஓர் இடம். இடம் என்று சொல்வதற்குப் பதிலாக மானிடத்துக்கு நேராத அவலங்களையெல்லாம் 2009 மே மாதம் தாங்கிய பூமித்தாயின் பெரும் புள்ளியாக திகழ்கின்றது.
இப்படி இயற்கையால் ஏற்படும் மாற்றங்களினால் மக்கள் ஏதேனும் அசௌகரியங்கள் நிகழக்கூடும் எனவும் கருதுகின்றனர்.
ஏனெனில் இம்மாதம் கனத்த மாதமாக கருதப்படுகின்றது இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறும் மாதமாகவும் கடந்த காலங்களில் நிகழ்ந்த அனர்த்தங்களை வைத்து மக்கள் கணக்கிடுகிறார்கள்.
இதனை அங்கு சென்று வரும் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.