நகர்ப்புறப் பெண்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் நிலையான பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு LIFT நிறுவனத்தினால் மிகவும் நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் காளான் பண்ணை மனித நேயம் நம்பிக்கை நிதியத்தின் நிதி அனுசரனையுடன் மட்டக்களப்பு கல்லடி – நொச்சிமுனையில் அமைக்கப்பட்டுள்ளது.
சம்பிரதாய ரீதியிலான முதலாவது காளான் அறுவடை LIFT நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி ஜானு முரளிதரன் மற்றும் நிதிப்பணிப்பாளர் திருமதி பத்மதர்ஷினி சுபாஷ்கரன் ஆகியோரின் தலைமையில் 06.11.2020 ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தானியங்கித் தொழில்நுட்பம் மூலம் காலநிலையைக் கட்டுப்படுத்தும் (Smart Climate Control System) உபகரணத் தொகுதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது காளான் வளர்ப்பு நிலையம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு மருத்துவப் பயன்களைக் கொண்ட சிறந்த புரத உணவான காளான் வளர்ப்பு மூலம் நகர்ப்புறப் பெண்களுக்கான வேலைவாய்ப்பை வழங்குவது மாத்திரம் அல்லாது ஆரோக்கியமான உணவினை சுகாதார முறையில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதும் LIFT நிறுவனத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்த முதலாவது அறுவடை நிகழ்வின் போது LIFT நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும், காளான் பண்ணையில் பணிபுரியும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
மனித நேயம் நம்பிக்கை நிதியத்தினால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன் இப்பண்ணையில் காளான் மற்றும் நவீன தொழில்நுட்ப முறைகளில் கீரை, சோளன் போன்றவையும் வளர்க்கப்படுகின்றது.