Search

அருள்மிகு வில்லூன்றிக் கந்தசுவாமி தேவஸ்தானம் – திருகோணமலை எமது இணையத்தில் சிறப்புப்பார்வை இன்று முதல் கந்தசஷ்டி விரதம் ஆரம்பம் – 15.11.2020 ஞாயிற்றுக்கிழமை

அருள்மிகு வில்லூன்றிக் கந்தசுவாமி தேவஸ்தானம் – திருகோணமலை எமது இணையத்தில் சிறப்புப்பார்வை

இது திருகோணமலையில் அமைந்துள்ள ஒரு சிறப்பு மிகுந்த முருகன் ஆலயம் ஆகும்.
இங்கு ஆகஸ்ட் மாதம் வளர்பிறை திகதியில் முருகனுக்கு கொடியேற்றத்திருவிழா நடைபெறுவது வழமை

இங்கு மிகவும் முக்கியமான அம்சம் யாதெனில் யாழ்ப்பாணம் அலங்கார கந்தனுக்கு ஒரு அலங்காரம் கந்தனாக விளங்குகின்றார்.

இங்கே கீழே பல திருகோணமலை அலங்கார கந்தன் படங்களும் இணைக்கப்பட்டு இருக்கின்றது

அத்தோடு இன்று ஆரம்பித்து இருக்கின்ற கந்தசஷ்டி விரதம் பற்றிய இக்கோயிலில் நடைபெறும் விவரங்களும் இதனுடன் வைக்கப்பட்டிருக்கின்றன.

இன்று முதல் கந்தசஷ்டி விரதம் ஆரம்பம் – 15.11.2020 ஞாயிற்றுக்கிழமை

எந்த வினையானாலும் கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு.

அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். மழலைப் பேறும் தரவல்லது இந்த விரதம் என்பதைக் குறித்துதான் ” சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் ” என்பதாகும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றியே இந்த விரதகாலங்களில் அனைத்தும் இடம்பெற வேண்டும் என்பதே கட்டுப்பாடும் நம் அனைவரின் பொறுப்பும் ஆகும்.

நிற்பதும்; நடப்பதும்; – நின்
செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் – நின்
செயலாலே
– கந்தனே துணை

ஸகந்த சஷ்டி விரதம் – 2020
**********************
துதிப்போர்க்கு வல்வினைபோம்;
துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம்
பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும்
நிமலர் அருள்கந்தர்
சஷ்டி கவசந் தனை.

அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

குகநேயச் செல்வர்களே!
மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூவகைச் சிறப்புக்களுடன் தசஷிண கைலாயம் என புகழ் பெற்றதும் ஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகத்தினாலும், அருணகிரிநாத சுவாமிகளின் திருப்புகழினாலும் ஏத்திப் போற்றப்பட்டதுமான திருகோணமலை நகரிலே ராமபிரான் தனது வில்லையூன்றியமையால் ” வில்லூன்றி ” எனப் போற்றப்படும் திருத்தலத்திலே வீற்றிருந்து வேண்டுவோர்க்கு வேண்டுவன ஈந்தருளும் கலியுக வரதனாகிய கஜவல்லி, மகாவல்லி சமேத ஸ்ரீ சண்முகப் பெருமான் வில்லூன்றியம்பதியில் அருள்பாலித்து வரும் வேளையில் நிகழும் சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30ம் நாள்(15.11.2020) ஞாயிற்றுக்கிழமை கந்தசஷ்டி விரதம் ஆரம்பித்து நடைபெறும்.

* 15.11.2020 ஞாயிற்றுக்கிழமை முதல் 19.11.2020 வியாழக்கிழமை வரை தினமும் காலை 7.00 மணிக்கு சண்முகப் பெருமானுக்கு அபிஷேகம், 8.00 மணிக்கு நித்திய பூஜை, 9.30 மணிக்கு விஷேட அபிஷேகம், விஷேட பூஜை, மயூரகிரிப் புராணப் படிப்பு முதலியன இடம்பெறும்.

மாலை 3.00 மணிக்கு சண்முகப் பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் 5.00 மணிக்கு நித்திய பூஜையை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விஷேட பூஜை இடம்பெறும்.

* 20.11.2020 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு சண்முகப் பெருமானை எழுந்தருளச் செய்து விஷேட சண்முகார்ச்சனை இடம்பெறும்.

மாலை 4.30 மணிக்கு ” சூரசம்ஹர உற்ஸவம் ” இடம்பெறும்.

* 21.11.2020 சனிக்கிழமை உதயத்தில் விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் பாறணைப் பூஜை இடம்பெறும்.

மாலை 5.00 மணிக்கு நித்திய பூஜையை தொடர்ந்து ” திருக்கல்யாண உற்ஸவம் ” விஷேட பூஜை, திருவூஞ்சல் முதலிய இடம்பெறும்.

பிடித்தவனுக்கு – வேலை பிடித்த வேல் முருகனுக்கு;
பிடித்தமான விரதம் – கந்தசஷ்டி விரதம்;
பிடிப்பவர்கள் நினைத்தால் – விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் நினைத்தால்
பிடித்த பிணியால் உருவாகும்
பிரச்சனைகளுக்கு எல்லாம் நிச்சயம் பிராயச்சித்தம் உண்டு.

சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் நம் வாழ்வில் நிலைக்க சண்முகப் பெருமானின் திருவருள் நம் அனைவரின் நல்வாழ்விலும் நிச்சயம் நல்வழியில் நடாத்தி துணையாக இருக்கும்.

ஸர்வேஜநா; சுகினோ பவந்து;
இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!!!
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *