Search

31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும் அமரர் திரு.பேரம்பலம் சத்தியமூர்த்தி 22.11.2020

31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும் அமரர் திரு.பேரம்பலம் சத்தியமூர்த்தி 22.11.2020

23.10.2020 சிவபதமடைந்த எங்கள் குடும்ப குத்துவிளக்கு பேரம்பலம் சத்தியமூர்த்தி அந்தியேட்டிக்கிரியைகள் எதிர்வரும் 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வெள்ளவத்தை கொழும்பில் நடைபெறும்.

வல்வை கே.கே.எஸ் வீதி லக்ஷ்மி பவன் மதவடி வல்வெட்டித்துறை, அமைந்துள்ள எமது இல்லத்தில் அஞ்சலியும் மதிய போசன விருந்தும் நடைபெறும் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அஞ்சலி நிகழ்விலும் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்…

கடந்த 23.10.2020 அன்று இறைபதமடைந்த எமது அன்புத்தந்தையின் மறைவுச்செய்தி அறிந்து எமது துயர்பகிர நேரில் கலந்துகொண்ட உற்றார்,உறவினர்,நண்பர்கள் மற்றும் அனைவருக்கும்,

அனுதாப செய்திகளை தொலைபேசி,குறுஞ்செய்தி,இணையத்தளங்கள்,சமூகவலைத்தளங்கள்,அஞ்சலிப்பிரசுரங்கள் மூலம் தெரிவித்தவர்களுக்கும், பல்வேறு வகைகளிலும் இன்றுவரை எம்மோடு தோளோடு தோள் சேர்த்து கையோடு கைகோர்த்து நிற்கும் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்புடன்
-குடும்பத்தினர்-
வல்வெட்டித்துறை




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *