இலங்கையின் தென்கிழக்கே தாழமுக்கம்! வடக்கு – கிழக்கு மக்களுக்கு அவசர அறிவிப்புவிடப்பட்ட நிலையில் புயலுக்கு நிவர் புயல் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது
இலங்கையின் தென்கிழக்கே யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 905 கி.மீ(489 கடல் மைல்) தொலைவில் தீவிர தாழமுக்கம் உருவாகியுள்ளது. இதனால் வடக்கு – கிழக்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்
இது வடக்கு, வடமேற்கு திசைநோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தாழமுக்கமானது கிழக்கு கடற்கரைக்கு அண்மித்து நகர்ந்து 25,26 ஆம் திகதிகிளில் வடக்கு மாகாணத்திற்கு அண்மித்தும் காணப்படும்.
இதனால் 23 திகதி தொடக்கம் பரவலாக கிழக்கு மற்றும் வட பகுதிகளுக்கு மழை அதிக பெய்து வருகின்றது
வடக்கு மாகாணத்தில் 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் கனமழையும் கடும் வேகத்தில் காற்றும் வீசும்.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதி கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுகிறன
தற்போதைய நிலையில் தாழமுக்கமாக நிலையில் மறைவெப்ப சக்தி கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால் புயலாகக் கூட மாறியுள்ளது.
உரிய திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதனூடாக பாதகமான விளைவுகளை இழிவாக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் தொழிலாளர்கள் புயல் காரணமாக சீற்றத்துடன் காணப்படுவதால் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் கடல் உணவு பொருட்கள் அரிதாக காணப்படுவதுடன் விலை உயர்வாக காணப்படுகின்றன