யாழ் நகரில் சரியான வடிகால் அமைப்பு வசதியின்மையால் போதனா வைத்தியசாலையின் சில விடுதிக் கட்டடங்களின் பகுதிகள் நீரில் மூழ்கின.
சில வைத்திய சேவைகள் தற்காலிகமாக இடங்களுக்கு மாற்றப்பட்டு சிரமத்தின் மத்தியில் வழங்கப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் எடுத்து இவ்வாறான அனர்த்தம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
அவ்வாறே பல நகரசபை மாநகர சபைகள் நுணுக்கமான நிதானமான நடவடிக்கையில் குறுகிய நோக்கு தூரநோக்கு தீர்க்கதரிசனமான சிந்தனையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இங்கு தூரநோக்கு உள்ள முதியவர்களின் ஆலோசனைகளையும் பெற்று பிரதேசத்துக்கு பிரதேசம் நீர்நிலைகள் வடிகால் அமைப்புகள் மாறுபடுவதனால் தரத்துக்கு உரிய அதிகாரிகள் செயற்படால் எதிர்காலம் சுபிட்சமாக அமையும்.
அதேபோன்று வல்வெட்டித்துறை நகரசபையும் சில சில இடங்களில் தூர நோக்கோடு அபிவிருத்தி நடவடிக்கைகளை பூரண படுத்துவது சாலச் சிறந்ததாகும்.