இயற்கை சீற்றம் இன்னும் தணியவில்லை , உறவுகளே அவதானமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள்.சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் அடுத்தடுத்து 5 புயல் வர உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வரும் 8 ஆம் திகதி, அதாவது நாளை, புயல் வரலாம் என்றும், அந்த புயலுக்கு “Tauktao” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் 17ஆம் திகதி புயல் வரக்கூடும் என்றும், இந்த புயலுக்கு “Yaas” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 24 ஆம் திகதி “Gulab”என்ற புயல் வரலாம் என்றும், அதேபோல, அடுத்த ஆண்டு அதாவது 2021-ம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி ஒரு புயல் வரலாம் என்றும், அந்த புயலுக்கு “Shaheen”என்று பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றும் மேலாக, அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி “Jawad “என்ற ஒரு புயல் வரலாம் என்றும் சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்தடுத்து புயல் தொடர்ந்து வரும் என சென்னை வானிலை ஆயவு மையம் தகவல் தெரிவித்துள்ளதால், புயல் காரணமாக தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்டுமோ என்று பொது மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.