சக்திவேல் அண்ணா உங்களை காலன் கவர்ந்து சென்றிருக்கலாம் ஆனால் உங்களது நினைவு எங்களை விட்டு என்றும் அகலாது.
நினைவுப் பகிர்வோ அல்லது
நினைவஞ்சலியோ என்னவென்று சொல்ல, என் மனம் கனக்கின்றது, நீங்கள் இல்லை என்பதனையே நினைக்க மறுக்கிறது இருந்தும்.
நீங்கள் சிறு வயதில் செல்வச் சன்னிதி ஆனந்த ஆச்சிரமத்தில் தொடங்கிய பொதுப் பணி,வல்வை வாசகசாலை,அதன் பின்னர் வல்வை யா/ சிவகுரு வித்தியா சாலையின் பெற்றார் ஆசிரியர் சங்கத்தின் செயலாளராக. பாடசாலையின் தரம் ஒன்பதாம் வகுப்பு வரையில் வியாபிப்பதற்கான முயற்சியில் கொழும்பு வந்து எனது தந்தையின் அறையில் தங்கியதால் எனக்கும் உங்களுக்குமான நெருக்கம் ஏற்பட்டது
நீங்கள் எடுத்த காரியத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு முடித்தீர்கள் எனபதை நான் கூட இருந்ததினால் கன்டவன்
அதன் பின்னர் எங்கள் கழகத்திற்கான விளையாட்டரங்கை அமைப்பதற்காக அன்று
நில உரிமையாளர்களின் அனுமதியின்றி வயல் வரம்புகளை எல்லாம், நாம் வெட்டி சமதரையாக்கிய போது ஏற்பட்ட பிரச்சனைக்காக பொலிஸ் நிலயம் வரை செல்லும் நிலை எங்களுக்கு ஏற்பட்ட போது,
அன்றைய கழகத் தலைவர் க. அருமைச்செல்வம் ,நீங்கள் ,எமது கழக ஸ்தாபகர்களில் ஒருவரான அண்ணாச்சி மகாலிங்கம் மற்றும் தங்கராசா அப்பா போன்ற பல கழகப் பெரியவர்கள்.
எங்களுக்கும் நில உரிமையாளர்களுக்கும் இடையிலான சமரச முயற்சியில் ஈடுபட்டபோது ஒரு பகுதி நிலத்தின்
உரிமையாளர் என்னையும் செல்லனையும்எ(ஈஸ்வரலிங்கம்) அடித்ததையும் இந்த இடத்தில நினைவு கூற வேண்டியள்ளது.
அதன் பின்னர்
நில உரிமையாளர் ஒருவருக்கு கண்டிப்பாக பணம் கொடுத்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை ஒண்று ஏற்பட்டபோது. நீங்கள் கப்பலில் இருந்து அனுப்பிய பணத்தை உங்களின் அனுமதியின்றி உங்கள் மனைவி எங்களுக்கு தந்துதவியதையும் மனம்கொள்கின்றேன்
அடுத்து ஐரோப்பிய வாழ்க்கையின் தொடராக கடந்த 2005 ம் ஆண்டு தொடக்கம் பல வேலைத்திட்டங்களை செய்தள்ளோம்
அ) மைதானத்தின் ஒரு பகுதி நிலமான சிவன் கோவில் கானியை குத்தகை எழுதுவதற்கு ஆவன செய்தது முதல்,
ஆ) புட்டனிப் பிள்ளையார் கோவிலை இன்றைய புதுப் பொலிவிற்கு கொண்டுவந்தது
இ) தீருவில் குளத்தை ஆழப்படுத்தி அதன் மூலமாக முதற்கட்டமாய் மைதானத்தை நிரவி லெவல் அடித்தது
ஈ) மைதானத்தில பார்வையாளர் இருக்கை அமைத்தது
உ) கழகத்திற்கு மின் பிறப்பாக்கி வேண்டியது வரை இன்னும் பல உன்டு
எனக்கும் உங்களுக்குமான இந்த உறவு இனிமேல் தொடருமா
எனக்கும் உங்களுக்குமான உறவு என்பது வெறுமனே ஒரு சொந்தம் அயல்வீட்டுக்காரர் ஒரே தெருவை சேர்ந்தவர் என்பதை கடந்து எமது பகுதி மக்களுக்கு குறிப்பாக தீருவில் மக்களுக்கு ஒவ்வொரு நல்ல திட்டங்களையும் பார்த்து பார்த்து வடிவமைத்து செய்ய ஆரம்பித்து அத்தனை தடைகளையும் தாண்டி செயற்படுத்தி நிறைவேற்ற ஒருமித்து பயணித்த ஒரு உறவுஅது.தீருவில் மைதானத்தை பார்க்கின்ற பொழுதில், புட்டணிககோவிலை பார்க்கின்ற போதினில் எமது கழகத்துக்கு சொந்தமான மின்பிறப்பாக்கி ஒளிதருவதை காணும் பொழுதுகளில் நீங்கள் எங்கள் நினைவுகளில் எப்போதும் இருப்பீர்கள்.
அண்ணா உங்கள் மேல் நான் கொண்ட அன்பு மாறாத நீங்கா நினைவுகளோடு என்றும்
தங்கள் கரம் பிடித்து தடம் கடந்த தீருவில் இளைஞர் விளையாட்டுக கழக தம்பி களில் ஒருவன்
ம.த.சிவகணேசன்(தங்கக்கட்டி)
