யாழ் பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிப்பிற்கு எதிராக நீதி கேட்டு, யாழ் பல்கலைக்கழக வாயில் முன்பாக எதிர்ப்பு போராட்டங்களை ஆரம்பித்துள்ள மாணவர்கள், பொதுமக்கள்..
முன்பெல்லாம் மாணவர்கள் உள்ளே நிற்பார்கள் என்ன நடந்தாலும் படையினர் உள்நுழைய முடியாமல் வெளியே நிற்பார்கள்.
மாணவர்கள் வெளியே வந்தால் மட்டும் படையினர் பலத்தை பிரயோகிப்பர்
இப்ப எல்லாம் மாறி நடக்குது!
யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் நிர்வாகமும்
யாழ் பல்கலையின்-
துணைவேந்தர் துணையுடன்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இராணுவப்பாதுகாப்புடன் அழிக்கப்பட்டது .
இனியாவது ஆளுக்கு ஆள் ஆள் சேர்க்காமல்
நாளுக்கு நாள் புதுக்கட்சிகள் தொடங்காமல் .
தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமையா
செயற்படவேண்டும். செயற்பட்டு
இழந்ததை எதையும் நீங்கள் மீட்கவேண்டாம்.
இருப்பதை தக்க வைத்தாலே .
போதும் 40ஆயிரம் வித்துக்கள்.
இலட்சக்கணக்கான உயிர்கள்
ஊனமாய் போன உடம்புகள்
காணாமல்போன ஜீவன்கள்
அத்தனைக்கும் ஒரு பரிகாரம்
வேண்டும் அதற்காகவேணும்
மனச்சாட்சியுடன்
இனியாவது ஒன்றாகுங்கள்.
என்று காலம் உங்களை மன்றாட்டமாக
கேட்கிறது அதைத்தான்
இந்தச்சம்பவம் உங்களுக்கு
அடித்துச்சொல்லியிருக்கிறது
ஏதோ நெஞ்சில் உதைத்தது போன்ற உணர்வு யாரோடு நோவோம்.