இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட சிறீலங்கா படைகளுக்கும் சின்னங்கள் அமைக்கலாம்.. அதுவும் தமிழர் தாயகப் பகுதியெங்கும் சிங்களப்படைகளின் நினைவுச் சின்னங்களால் நிறைந்துகிடக்கிறது..
ஆனால் இவர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த மண்ணில் அவர்களின் உறவுகளால் ஒரு நினைவுச்சின்னத்தைக் கூட அமைத்து நினைவில் கொள்ளமுடியாத ஆக்கிரமிப்பு ஒடுக்குமுறை..
இதன் தொடர்ச்சியே யாழ்ப்பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் மக்கள் படுகொலை நினைவுச்சின்னம் வெள்ளி இரவோடு இரவாக கோத்தா படைகளால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது..
இனிமேலலாவது புரிதலுடன் உண்மையாகவும் வெளிப்படையாகவும் ஒன்றிணைந்த மக்கள் செயற்பாட்டிற்க்கு தயாராவார்களா, அனைத்து தமிழ் தலைமைகளும் இல்லை மாறி மாறி பதவிகளுக்காக மோகங்களைப் பறப்பி பனிசண்டை பிடிப்பார்கள்…?