எங்கள் குடும்பத்தின் சார்பாக சோபியும் நானும் இங்கே கனடாவிலும் உலக அளவிலும் தைப்பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியம் ஏற்பட எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கின்றனர்
இதனை தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்
மேலும் தெரிவிக்கையில் யாழ் பல்கலைக்கழகத்தில் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என்றும் இத் தூபியானது இப்படியான அழிவு வேண்டாம் என்றும் ஒரு நல்லிணக்கத்திற்கு அமைய வல்லது என்றும் கூறியிருக்கின்றார்.