தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கபட்ட இனவழிப்பை கண்டித்தும் ,அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் ஆக்கபட்டவர்களுக்கு நீதி கோரியும் கட்டாய ஜனாஸா எரிப்பை கண்டித்தும் தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தியும் அம்பாறை பொதுவிலில் இருந்து யாழ்ப்பாணம் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி தற்போது தாழங்குடா மட்டகளப்பில் தரித்துள்ளது .நாளை காலை 8மணிக்கு அங்கிருந்து ஆரம்பமாகி மட்டகளப்பு நகரம் வாழைச்சேனை வாகரை ,மூதூர் வழியாக திருமலையை வந்தடைந்து அங்கிருந்து முல்லைத்தீவு நோக்கி செல்லவுள்ளது. 15 பொலிஸ் பிரிவுகளில் 05 நீதிமன்றங்களால் பலருக்கு எதிராக 15க்கும் மேற்பட்ட தடையுத்தரவு பிறப்பிக்கபட்டிருந்த போதிலும் தடைகளை தாண்டி உரிமை போராட்டம் முன்னெடுக்க பட்டது . போராட்டத்துக்கு ஆதரவு நாளையை நாளிலிலும் அதற்க்கு அடுத்த நாளிலும் அதிகளவிலானோர் திரண்டு ஆதரவு நல்க வேண்டும் இன்று போராடியவர்கள் உடலளவில் கடுமையாக பாதிக்கபட்டுள்ளார்கள் . எனவே உங்கள் உங்கள் பகுதிகளில் பேரணியில் நீங்களும் இணைந்து ஆதரவை நல்குங்கள்.
P2P