தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 46வது ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் இன்று காலை ஜெனிவாவில் ஆரம்பமாகியது.
எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடர்பில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
அதன்படி, 22ஆம் திகதி நடைபெறும் அமர்வில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் லீ உரையாற்றவுள்ளதுடன், 23ஆம் திகதி இடம்பெறவுள்ள அமர்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றவுள்ளார். இதன்போது இலங்கை விவகாரம் குறித்து பிரஸ்தாபிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் முதல்நாள் அமர்வில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். மனித உரிமை ஆணைாயாளரின் முதல் உரையின்போதும் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பை கவலைக் கிடமாக்குமா…? இந்தியா அமெரிக்கா ஜக்கிய இராச்சியம் (பிரித்தானியா)