காணாமல்போன மகனைத் தேடியலைந்து போராடிய தாய் மரணம்! இதுவரை
84 உறவுகள் உயிரிழந்திருக்கிறார்கள்.
46 ஜ நா மனித உரிமைப் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலப்பகுதியிலேயே இவர் உயிரிழந்திருக்கின்றனர்.
ஓரிரு தினங்களுக்கு முன்பாக கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டம் ஐநா விடம் நீதியைக் கோரி போராட்டம் நடைபெற்று முடிந்தது சில தினங்களிலேயே இவர் இயற்கை எய்தியது ஐ நா விடம் பெண்கள் குரல் கேட்கிறதோ என்ற ஐயம் எழுகின்றது.
காணாமல்போன தனது மகனைத் தேடியலைந்து போராடி நீதிகோரிவந்த தாயொருவர் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.
வவுனியா மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது 61) என்ற தாயாரே, இன்று (செவ்வாய்க்கிழமை) மரணமடைந்துள்ளார்.
இவரது மகன் தருமகுலநாதன் (வயது 39) கடந்த 2000ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமலாக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரைத்தேடி வவுனியாவில் ஆயிரத்து 465 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறைப் போராட்டத்திலும் குறித்த தாய் கலந்துகொண்டு, தனது மகனை கண்டுபிடித்து தருமாறு போராடியிருந்தார்.
இந்நிலையில், மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தம் பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்று அறியாமலேயே இதுவரை 84 உறவுகள் உயிரிழந்திருக்கிறார்கள்.