உதிரம் வழங்கிக் கொண்டிருக்கும் குருதிக்கொடையாளர்களுக்கும், அனைத்து செயற்பாட்டாளர்களுக்கும் இரத்த வங்கிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பு
இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது என்ற செய்தியினை ஊடகங்கள் வாயிலாக கேள்விப்பட்ட இளைஞர் யுவதிகள் யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு வருகை தந்து உறவுகளின் சிகிச்சைகளுக்காக சமூக அக்கறையுடன் உதிரம் வழங்கிக் கொண்டிருக்கும் குருதிக்கொடையாளர்களுக்கும் அத்துடன் தங்கள் தங்கள் இடங்களில் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு பல சமூக அமைப்புக்கள் சமூக பொறுப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கும் மற்றும் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கி வரும் குருதிக்கொடையாளர்கள், இரத்ததான முகாம் ஒழுங்கமைப்பாளர்களுக்கும் எதிர்காலத்தில் உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க காத்திருக்கும் இரத்ததான முகாம் ஒழுங்கமைப்பாளர்கள், குருதிக்கொடையாளர்கள் அனைவருக்கும் இரத்த வங்கிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.