வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஜ.இ) ஆதரவில் நடாத்தப்படும்,VEDA நிர்வாகத்தினர் VEDA கல்வி நிலைய மாணவர்களின் பெற்றோர்களுடன் ஒர் சந்திப்பு
VEDA கல்வி நிலையத்தில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கான கலந்துரையாடலானது ஒவ்வொரு தவணையும் VEDA நிலைய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டு வருவது வழமை. அந்த வகையில் 2013 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட கலந்துரையாடலானது 2013.04.27 அன்று நமது VEDA நிலையத்தின் முன்றலில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் 97% ஆன பெற்றோர்கள் கலந்துகொண்டமை மிகவும் சிறப்புக்குரியது.
இக் கலந்துரையாடலானது VEDA நிலையத்தின் தலைவர் திரு. S. மதுசூதனன், நிர்வாக உறுப்பினர் திரு. S. அரவிந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) பொருளாளர் திரு. M. ஸ்ரீதரன் அவர்களும் கலந்து தமது கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.
