பிரித்தானிய பாராளுமன்ற விவாதத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் அம்பிகை பற்றி பல எம்பிக்கள் பெயர் குறிப்பிட்டு கதைத்தனர்.நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்திலேயே இவை தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
அவரின் உண்ணாநிலை போராட்டம் தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டியவை எனவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதையும் அதில் ஈடுபட்ட படை அதிகாரிகள் குறிப்பாக சவேந்திர சில்வா போன்றார் பிரித்தானியா வருவதை தடைசெய்யவேண்டுமெனவும் தெரிவுத்திருந்தனர்.
மொத்தத்தில் நடந்துமுடிந்த உண்ணாநிலையினை வலியுறுத்தியே இந்த அவசர பாராளுமன்ற விவாதத்தை பிரித்தானியாவில் செயற்படும் அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டிருந்த தமிழர்கள் வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.