திரு சிவப்பிரகாசம் ஆறுமுகம்
(கொழும்பு சாம்பியாவில் கணக்காளர், இலங்கை வானொலியில் நாடகப்புகழ் நடிகர்)
அன்னை மடியில் : 2 யூன் 1937 — ஆண்டவன் அடியில் : 2 மே 2013
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வல்வை சிவப்பிரகாசம் ஆறுமுகம் அவர்கள் 02-05-2013 வியாழக்கிழமை அன்று முருகனடி சேர்ந்தார்.
உயர்திரு சிவ. ஆறுமுகம் தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் மீது “வேலழகர் பாமலர்” போன்ற பல பாமாலைகளையும் வல்வை முத்துமாரி அம்மன் மீது “அன்னையர் பாமலர்” பாடல்களையும் பல பக்திப் பாடல்களையும் பல கூட்டுப்பிரார்த்தனைப் பாடல்களையும் இயற்றி பாடியவரும், ஆற்றங்கரையானின் மீது அளப்பரிய அன்பும் பக்தியும் கொண்ட சிவ ஆறுமுகம் அவர்கள் தாம் செல்வச்சந்நிதி முருகன் மீது இயற்றிய பாடல்களை ஒலிப்பேழையில் வெளியிட்டு செல்வச்சந்நிதி முருகப்பெருமானின் புகழையும் அருளையும் அற்புதங்களையும் உலகறியச் செய்த செல்வச்சந்நிதியானின் அடியவரும் ஆவார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் இராசரெத்தினம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பொன்னுத்துரைஐயர் துரைரெத்தினம்அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கௌரி, காயத்ரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவ.பசுபதி, நாகமுத்து மற்றும் குமாரசாமி, வேலுப்பிள்ளை, மகமாயிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீராகவன், செல்வக்குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பாலேந்திரா ஐயர், அன்னலெட்சுமி, செல்லப்பாக்கியம் மற்றும் இராஜேந்திரா, வசந்தாதேவி, புவனேந்திரன் ஐயர், புஷ்பராஜமணி, புஷ்பராணி ஆகியோரின் மைத்துனரும்,
குமரன், கார்த்திகா, முருகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 07/05/2013, 09:00 மு.ப
முகவரி: 25 Northwick Circle, Harrow HA3 0DY
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 07/05/2013, 12:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Golders Green Crematorium West Chapel, Hoop Lane, London NW11 7NL
தொடர்புகளுக்கு
கௌரி ஸ்ரீராகவன், காயத்ரி செல்வக்குமரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442089077444