மரண அறிவித்தல் அமரர் திருமதி ராஜவேல் சாந்தலக்ஷ்மி (சாந்தாக்கா)
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் காட்டுப்புலம் தொண்டமானாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜவேல் சாந்தலக்ஷ்மி (சாந்தாக்கா) அவர்கள் இன்று (09/04/2021) இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான வெங்கடாசலம் மீனாட்சியம்மா (தங்கன் அம்மா) ஆகியோரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான டாக்டர் கிருஷ்ணசாமி சிறிவித்தியநாயகி மற்றும் மகேஸ்வரியம்மா ஆகியோரின் ஆசை மருமகளும்
காலஞ்சென்ற ராஜவேலின் அன்பு மனைவியும் இன்பராஜன், வித்தியா ஆகியோரின் அன்புத்தாயும் பிறேமதாஸ் சாமினி ஆகியோரின் பாசமிகு மாமியும் குகப்பிரியன் கல்பனா குறிஞ்சி சாம்பவி சிவபாலமுருகன் பவித்திரன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்
காலஞ்சென்ற வேலும்மயிலும் கணேசபாக்கியன் மற்றும் மகாலக்சுமி, கார்த்திகேயன், கமலரங்கன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் காலஞ்சென்றவர்களான ஆனந்தராணி, சுந்தரலிங்கம் மற்றும் செல்வரூபராணி, வில்வவதனா, காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், மற்றும் இலட்சுமிதேவி, ரூபசௌந்தரி ராஜேஸ்வரி , காலஞ்சென்ற சண்முகானந்தன், மற்றும் மங்களேஷ்வரி, காலஞ்சென்ற ஞானேஷ்வரி மற்றும் புவனேஷ்வரி, அருளானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் காலஞ் சென்றவர்களான கார்மேகசுந்தரம் , தியாகராஜா, நவரட்ணம், விஜயகுமார் மற்றும் , ஞானதிலகன், ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும் காலஞ்சென்ற சுந்தரவதனா, மற்றும் நித்தியலக்சுமி, அம்பிகைவதனா ஆகியோரின் சகலியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் காட்டுப்புலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகள் நாளை (10.04.2021) மாலை 4 மணியளவில் காட்டுப்புலம் இந்துமயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்