எவ்வளவுதான் மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஒருவரடைய இயல்பான குணத்தை யாராலும் மாற்ற முடியாது.இது உலகஅறிஞர்களால் உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. வல்வையர்களாக நாங்கள் வாழ்ந்த ஒற்றுமையின் வல்வையர் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வல்வை மண்ணில் இருந்ந பொலிஸ் நிலையத்தின் பதிவேடு சுமார் 5வருடங்கள் எந்த குற்றப் பதிவும் பதியப்படாமல் நாம் வாழ்ந்த வாழ்வுதான் ஆய்வாளர்களுக்கு வியப்பை தந்த விடயம்.
எம் வல்வை மண்ணில் ஆரம்பகாலத்தில் அங்கு வந்த வியாபாரிகள் செக்கல் அந்திசாயும் 6மணிக்கு முன்னர் ஊரைவிட்டு வெளியேற வேண்டும் என்று எழுதாத சட்டத்துடன் வாழ்ந்த சமுதாயம்தான் நாங்கள்.
எமது தேசியம் தன்னை ஒர் அளவு நிலை நிறுத்திக் கொள்ளும்வரை எந்த முகவரியும் இல்லாமல் ஊருக்குள் வந்தவனை வந்த பாதையில் திருப்பி அனுப்பிய ஊரவர்கள் நாங்கள்.
இங்கிலாந்தில் வல்வையர்கள் குடியேற ஆரம்பித்த காலத்தலிருந்து வல்வையர் நலன் புரிச்சங்கத்தை முட்டாசியண்ணாக்கள் நந்தியண்ணா ஆர்விஜி சிவா அண்ணாக்கள் செயல் படுத்தி வந்தார்கள். நாம் நிறைய வல்வையர்கள் வந்த பிற்பாடு செல்லத்துரை குட்டிமணியண்ணாக்கள் வந்து பிரமாண்டமான வல்வையர்கள் ஆசியுடன் உலக வல்வையர் ஒன்றியம் ஸ்தாபித்தார்கள்.
தேசியம் உலகம் என்ற சொற்பதம் வேண்டாம் வல்வை ஒன்றியம் போதும் என்று நடைமுறைப்படுத்தினேம். வல்வை ஒன்றியம் 10 வருடங்களாக வல்லை மண்ணிலும் டென்மார்க்கிலும் மகத்தான சேவைகள் செய்து கொணடடிருப்பதை நாம் அறிவோம். இடையில் வந்த தேசியப்பேரவை வல்வையர்களின் மனங்களைக் கவராமல் தேய்ந்து மறைந்து விட்டது. நாம் மீண்டும் நலன்புரிச்சங்கமாக இணைந்து கோடைவிழாக்ள் அலைஓசை விழாக்கள் நடத்திக்கொண்டு இருக்கிறோம்.
ஆனால்வல்வையருக்குமட்டும் ஒன்று கூடக்கூடிய ஒன்று வசந்தகால ஒன்றுகூடல்கள் 2003ம் ஆண்டுக்கு பிறகு ஏன் கூட்டப்படவில்லை எவருக்கும் புரியவுமில்லைகூடுவதற்கு முயற்சிஎடுக்கவுமில்வை. தேசிய பங்களிப்பிலும் தேசியபேராட்டத் தேவைக்கு அமைய உண்ணாவிரம் ஊர்வலங்கள் முன்னெடுத்ததில் காலம் கரைந்து விட்டதுதான் உண்மையாக இருக்குமோ
மேலு;ம் காலம் கரைந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் தேசியம் மௌனித்து 3 வருடங்களை நிறைவு செய்கிறது.
மீண்டும் சொல்கிறேன் நாங்கள் வல்வையர்கள்; காலத்தில் எவ்வனவுதான் மாற்றங்கள் ஏற்பட்டாலும் எங்கள் வல்வையரின் இயல்பான குணத்தை எவராலும் மாற்ற முடியாது. ஆகவே நாங்கள. மீண்டும் வல்வையராகவே இணைந்து மதில் பூனையாக இருக்கும் எம் செல்வங்களிடம் சகல தகமைகளுடனும் எம் சங்கத்தை ஒப்படைத்து அவர்களுக்கு பழைய வன்தொண்டர்கள் கடமை புரிய காத்திருப்போம். குட்டிமணியண்ணா அவர்கள் சிங்கையில் பேராசிரியராக இருந்த போது லண்டன் கனடா வந்து எம்வல்வையர்களை சந்தித்து நாம் எமது முகவரிகளை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் ஒன்று கூடி எதாவது செய்து கொண்டிருப்போம் என்பதை அறியதந்து 38பேர் கூடியதில் 5போர் மையக்குழுவாக தெரியப்பட்டதில் என்னையும் சேர்த்தார்கள். அந்த நேரம் நாம் இந்த நாட்டுக்கு வந்த நிலைப்பாடுகள் பழையவர்களின் ஒத்துழைப்பின்மையால்,
மையக்குழு வல்வை புளுஸ்சுடன் கலந்துவிட்டது. அதன் பின்னர் தேசிய பேரவை நலன்புரிச்சங்கங்கள் என்னையும் கனகேந்திரன் அண்ணா போன்றோரை பெயருக்கு மட்டும் போசகர்களாக நியமித்து இருந்தார்கள். அவைகள் எதையுமே எம்முடன் கலந்தாலோசிக்கம் இல்லை. எமக்கு எதையுமே தெரியப்படுத்தியதுமில்லை. பழைய வல்வை நிர்வாகங்கள. ஏனக்கு தந்த கௌரவத்தினால் இவ் இணையம் மூலம் என் எழுத்து மூலமான ஆலோசனையையும் ஆதாங்கத்தையும் சமர்ப்பிக்கிறேன் உங்களுக்கு நிறைவானவற்றை ஏற்று எம்பாரம்பரிய பெருமைகளுக்கு மேலும் மகிடம் சூட்டி வல்வையர் வல்வையராக நிலையெடுத்துக்கொள்வோம்.
எமது தேசியத்தலைவர் எம் போராட்டத்தை பல வடிவங்களாக பிரித்து பொறுப்புக்கள் செயந்பாடுகளை வகுத்தமாதிரியும்.இங்கு இங்கிலாந்தில உள்ள பெரிய பெரிய வியாபார ஸ்தாபனங்கள் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு முகாமையானர் பொறுப்பாளர்கள் என்று பிரித்து லாபநோக்கில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாங்களும் எமது சமூக முன்னேற்றத்துக் தேவையான பிரிவுகளை கண்டறிந்து பொறுப்பாளர்கள் இரண்டு உபபொறுப்பாளர்கள் தெரிவு செய்து இரண்டாம் பொறுப்பாளர் அடுத்தவருடம் பொறுப்பாளராகவும் மூன்றாம் பொறுப்பாளர் அதற்கு அடுத்த வருடம் பொறுப்புக்களை நிர்வகிப்பார். நிர்வாகத்திற்கு விரும்பி ஒருவர் மனப்பூர்வமாக மூன்று வருடங்கள் வல்வையர் சமூகத்துக்கு சேவை செய்யும்வாய்ப்பு கிடைக்கிறது. நிர்வாகத்தில் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் தொடர்ந்து போசகராக இருந்து எம் நலன்புரிச்சங்த்தை வழி நடத்திச் செல்லலாம் ஆகவே எம் நிர்வாக அமைப்பு எப்போதும் குலையாமல் ஒவ்வொரு வருடமும் மூன்றாம் இடத்துக்கு மட்டும் தெரிவுகள் மேற்கொண்டால் போதுமானது.
புரிய நிர்வாகம் கீழ் அட்டவணைப்படுத்தியபடி செயற்படுத்தினால் நிறையப்பேர் குடும்மாக எம்முன்னேற்றங்களுக்கு பங்களிப்புச் செய்வார்கள். எமக்கான 19 நிர்வாகமாக பிரித்துள்ளேன். நிர்வாக கூட்டங்களுக்கு தலைமைப்பொறுப்புள்ள 19பேர் கூடி செயல்பட்டு இணையமூலம் செயல்பாடுகள் அறியத்தரப்படும்.
தலைவர் -2012 2013ல்வல்வை நலன்புரிச்சங்கத்தின் போசகர்.
உபதலைவர் -1 2013ல் தலைவராகவும் 2014 ல் போசகர்
உhதலைவர் -2 2013ல் உபதலைவராகவும்2015ல் தலைவராகவும் பின் போசகராகவும் செயல்படுவார்கள்.
செயளாளர்-2012ல்
உபசெயளாளர்-1 – 2013ல் செயளாளர்
உபசெயளாளர்-2 -2014ல் உபசெயளாளர்-1 2015ல்செயளாராகவும் செயல்படுதல்.
பொறுளாளர்
உபபொறுளாளர்-1
உபபொறுளாளர்-2 இவர்கள் செயளார் போன்று வருடச்செயல்பாடுகள்
கணக்குப் பரிசோதகர்.
உபகணக்குப் பரிசோதகர்-1
உபகணக்குப்பரிசோதகர்-2
கலை கலாச்சாரக்குழு – அலைஓசை
தலைவர்
உபதலைவர்-1
உபதலைவர்-1
கோடைவிழாக்குழு – இந்திரவிழா
தலைவர்
உபதலைவர் -1
உபதலைவர் -2
விளையாட்டுத்துறை
தலைவர்
உபதலைவர்-1
உபதலைவர்-2
கப்பல் மற்றும் வர்த்தகத்துறை
தலைவர்
உபதலைவர்-1
உபதலைவர்-2
மணப்பந்தல் சேவை
சேவையாளர்-1
சேவையாளர்-2
சேவையாளர்-3
அரசியல்
பொறுப்பாளர்-1
பொறுப்பாளர்-2
பொறுப்பாளர்-3
சிதம்பாராக்கல்லுரி பழைய மாணவர் சங்கம்
தலைவர்
உபதலைவர்-1
உபதலைவர்-2
சிவகுருவித்தியாசாலை பழைய மாணவர் சங்கம்
தலைவர்
உபதலைவர்-1
உபதலைவர்-2
அமெரிக்கன்மிசன் பாடசாலை பழைய மாணவர்சங்கம்
தலைவர்
உபதலைவர்-1
உபதலைவர்-2
றோமன்கத்தோலிக்கப் பாடசாலை பழைய மாணவர்சங்கம்
தலைவர்
உபதலைவர்-1
உபதலைவர்-2
வல்வை மகளிர் பாடசாலை பழைய மாணவர் சங்கம்
தலைவர்
உபதலைவர்-1
உபதலைவர்-2
வல்வை முதியோர் அமைப்பு
தலைவர்
உபதலைவர்-1
உபதலைவர்-2
சுற்றுலாத்துறை
தலைவர்
உபதலைவர்-1
உபதலைவர்-2
இங்கு 19 பிரிவாக மொத்தம் 58பேர் உள்வாங்கப்படுவார்கள்.நாம் எமது நிர்வாகத்தை கட்டமைத்து ஆழ்வதற்கு இனி எந்த புத்தகங்களையோ ஆலோசனை மையங்களையோ நாடவேண்டியதில்லை. தலைவர் பிரபாகரன் எப்படி தேசியத்தை நடாத்தினாரோ ஆயுதததைத் தவிர்த்து அவரின் படிப்பினைப்படி ஒவ்வொரு நிர்வாகமும் தலைமைக்கு கட்டுப்பட்டு 365 நாட்க்கள் வல்வை நலன்புரிச்சங்கத்தை நடைமுறைப்படுத்தலாம்.
19 நிர்வாகத்தின் பொறுப்பாளர்களும் (தலைவர்) நிர்வாகக்கூட்டத்தை நடத்தலாம். கூட்டங்களுக்கு பழைய காலத் தலைவர்கள் ஒரு சிலரும் கௌரவ அழைப்புக்கொடுத்து கூட்டச்செயல்பாடுகள் ஒவ்வொரு படியாக மேலேறிச் செல்லலாம்.
ஒவ்வொரு செயற்பாட்டுக்குழுவும் முழுஉரிமைபடபொறுப்புகளையும் எடுத்து உங்கள் பின்னல் அமைப்பில் உள்ள நண்பர் குழுக்கழுடன் இணைந்தும் எமது இணையத்தில் போதுமான அவகாசத்தில் செய்திகளை தந்து செயல்பாடுகள் முன்னேடுத்துச் செல்லும் போது வெற்றி நிச்சயம்.
வல்வையருக்கான வசந்தகால ஒன்றுகூடல் குளிர்கால ஒன்றுகூடல்களை நடாத்திக்கொண்டு வேறு எத்தகைய பொதுமக்களுக்கான விழாக்கள் நடத்தினாலும் வரவேற்கப்படும் என்பதுதான் என்போன்ற பலரின் அவிப்விராயம்.
இனி வரும் புதிய நிர்வாகம் வருட வருடம் வசந்தகால ஒன்றுகூடல் நடாத்துவதில் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புவோம்.
எங்களையே எங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியகாலச்சுழலில் எமது சமுதாயம் இருப்பதால் இவ்விடயத்தை திரும்த்திரும்ப கூறவேண்டியவனகிறேன்.
குடும்பவிழாக்களில் நம் சமுதாயம் கோபதாபங்களை மறந்து இணைவது போல் நம் ஒன்று கூடல்கொண்டாட்டங்களிலும் நல்லவைதான் நடக்கும். 2003ற்கும் 2012 ம் இடைப்பட்ட காலத்தில்எம்மோடு இணையவேண்டிய இளைய சமுதாயம் பாதை மாறிப் போய்விட்டார்கள். இன்று தொடக்கம் கூடி நாம் நாம் போகும் பாதைகளில் சில நல்ல மாற்றங்கள் செய்வோம் ஆகில் எதிர் காலப்பொக்கிசங்களை நாம் திரும்ப பெற சந்தர்ப்பங்கள் உண்டு. இனிமேலும் எமக்கான உயர் பாலங்கள் அமைக்க குட்டிமணியண்ணாக்களோ செல்லத்துரை வாத்தி போன்றவர்களோ வரப்போவதில்லை. இனிமேல் நாம் தான் எமது சமுதாயத்தின் பயணப்பாதையை செப்பனிட்டு புதியவழிகள் புதியமுயற்சிகள் தொடராவிட்டால் வல்வையுh என்ற முகவரிகள் தொலைத்து அன்னிய தேசத்து மின்சாரசுடலைகளில் எரிந்து முடிவோம்.
நிர்வாக கூட்டம் நடைபெறும்12.02.2012ல்அழகாக ஆனந்தமாக வாருங்கள். வல்வையருக்கு வெற்றி நிச்சயம். .ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல் அநடத தலைவனின் மரபனு வீரியம் எங்களில் அபடபடியே இல்லாவிட்டாலும் அதே மண்ணில் வாழ்ந்த எமக்கு அத்தகைய தகமைகள் கண்டிப்பாக எமக்கு இருக்கும்.